(எம்.மனோசித்ரா)
உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தினை நாளை மறுதினம் செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் அச்சுறுத்தல் மிக்கதாகும் என்றும் குறித்த சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் ஜனநாயகம் குறித்து பேசும் அனைவரும் கைது செய்யப்படுவர் என்றும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பாராளுமன்றத்திற்குள்ளும் , வெளியிடும் இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க தயாராகவுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. எனினும் எதிர்க்கட்சிகள் கூறும் ஏற்பாடுகள் எவையும் குறித்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்படவில்லை என அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தினை 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம். ஒன்றன் பின் ஒன்றாக பல சட்ட மூலங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இவை மேன்முறையீட்டுக்கு உட்படுத்தப்படும் போது நீதிமன்ற நடவடிக்கைகளிலும் சிக்கல்கள் ஏற்படக் கூடும். அவற்றின் அடிப்படையிலேயே இவை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விஜேதாச ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM