புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான சட் ஜிபிடியைத் தடை செய்யும் முதல் மேற்கத்திய நாடாக இத்தாலி மாறியுள்ளது.
சட் ஜிபிடி (Chat GPT) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ‘ஓபன் ஏஐ’ (OpenAI) என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. மற்றும் மைக்ரோசாப்ட் ஆதரிக்கும் மொடல் ஆகும். இதனை மற்றொரு தேடு பொறி என்றும் சொல்லலாம்.
இந்நிலையில், சட் ஜிபிடியில் தனியுரிமை பாதுகாப்பு குறித்து கவலைகள் இருப்பதாக இத்தாலிய தரவு-பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஓபன்ஏஐயின் சட் ஜிபிடியை உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்து விசாரணை நடத்தப்படுவதாக இத்தாலியின் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சட் ஜிபிடியை மில்லியன் கணக்கான மக்கள் சட் ஜிபிடியைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதனால் இயற்கையான, மனிதனைப் போன்ற மொழியைப் பயன்படுத்தி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும்.மேலும் இது 2021 இல் இணையத்தை அதன் தரவுத்தளமாகப் பயன்படுத்தி மற்ற எழுத்து வடிவங்களையும் பிரதிபலிக்கிறது.
மைக்ரோசொப்ட் இதற்காக பில்லியன் கணக்கான டொலர்களை செலவழித்துள்ளது மற்றும் இது கடந்த மாதம் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான பிங் தேடுபொறியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், வேர்ட், எக்செல், பவர்பொயிண்ட் மற்றும் அவுட்லுக் உள்ளிட்ட அதன் அலுவலக பயன்பாடுகளில் தொழில்நுட்பத்தின் பதிப்பை உட்செலுத்துவதாகவும் அது கூறியுள்ளது.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவின் (AI) சாத்தியமான அபாயங்கள் குறித்து கவலைகள் எழுந்துள்ளது. இதனால் வேலை வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தல் மற்றும் தவறான தகவல் பரப்புதல் ஆகியவை அடங்கும்.
இந்த வார தொடக்கத்தில், எலோன் மஸ்க் உட்பட தொழில்நுட்பத்தின் முக்கிய நபர்கள், இவ்வகையான செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதற்கான கட்டுப்பாட்டை மீறும் அச்சத்தின் மத்தியில் இடைநிறுத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
இத்தாலிய கண்காணிப்பு அமைப்பு ஓபன் ஏஐ இன் சட்போட்டைத் தடுப்பது மட்டுமல்லாமல், பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கு இணங்குகிறதா என்பதையும் விசாரிக்கும் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM