கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கிய சர்வதேச மகளிர் தினம் 2023 விழா கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி அளவில் கொழும்பு தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில், வெகு சிறப்பாக இடம்பெற்றது.
திருமதி மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் தலைவியாகவும், ஓய்வுநிலை மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்திசேகரன் பிரதம விருந்தினராகவும், திருமதி மலர்மதி கங்காதரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துக் கொண்டிருந்தனர்.
மங்கல விளக்கேற்றல் மற்றும் செல்வி பிரியங்கா ஆன் பிரான்சிஸ் இன் தமிழ் வாழ்த்தோடும் விழா ஆரம்பமானது.
தொடர்ந்து, கொழும்பு தமிழ்ச்சங்கத் தலைவர் சட்டத்தரணி நடராஜர் காண்டீபனின் வாழ்த்துரை இடம் பெற்றது. தொடர்ந்து இடம்பெற்ற விழா தலைவியின் தலைமை உரையை அடுத்து சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப் பெற்றனர். இவர்களிலும் மூத்த ஆளுமைப்பெண்மணிகள், இளம்பெண் ஆளுமைகள் என்ற வகையில் பலரும் கெளரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மூத்த பொருளியலாளர் மத்திய வங்கி, திருமதி பூங்கோதை வேணுகானன் அவர்களால் ‘இலங்கை பொருளாதாரத்தில் பெண்களின் வகிபாகம், சமகாலப் போக்குகள் மற்றும் எதிர்கால நோக்கு’ போன்ற பொருளை மையமாகக் கொண்டு சிறப்புரை ஒன்று ஆற்றப்பட்டது. நிறைவாக கலைமாமணி ஸ்ரீமதி சிவானந்தி ஹரிதர்ஷன் அவர்களின் நடனப்பள்ளி மாணவிகளால் ‘பெண் சக்தி வடிவினள்’ என்ற தலைப்பில் ஒரு நடன விருந்தும், அதனைத் தொடர்ந்து ‘பெண்களின் பாதுகாப்பு, சட்டத்திலா சமூகத்திலா என்ற பொருளில் ஒரு பட்டிமன்றமும் இடம்பெற்றது. நிறைவாக, நன்றியுரையுடனும் சங்க கீதத்தின் இன்னிசையிலும் மேற்படிவிழா இனிது நிறைவேறியது.
-திருமதி ஜெகநந்தகுரு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM