அவுஸ்திரேலியாவில் தினேஷுக்கு தங்கம், துலூனுக்கு வெள்ளி

01 Apr, 2023 | 09:33 AM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும அவுஸ்திரேலிய பகிரங்க மெய்வல்லுநர் போட்டிகளில் பரா விளையாட்டு வீரர்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கைக்கு தங்கம் உட்பட 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

பரா ஈட்டி எறிதலில் உலக சாதனை வீரர் தினேஷ் ப்ரியன்த தங்கப் பதக்கத்தையும் அவரது சக பரா வீரர் சமித்த துலான் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற ஆண்களுக்கான F46 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் ஈட்டியை 63.18 மீற்றர் தூரத்திற்கு எறிந்த தினேஷ் ப்ரியன்த தங்கப் பதக்கத்தை சுவீகரித்து இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

இதே போட்டியில் F44 பிரிவில் ஈட்டியை 64.20 மீற்றர் தூரத்திற்கு எறிந்த சமித்த துலான் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். அவர் F44 பிரிவில் முதலிடத்தைப் பெற்றமை விசேட அம்சமாகும்.

டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் F46 பிரிவில் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்ததன் மூலம் உலக சாதனையுடன் தினேஷ் பிரியன்த தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தார்.

அதே போட்டியில் F44 பிரிவில் சமித்த துலான்  வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இது இவ்வாறிருக்க பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற இலங்கை வீரர் பாலித்த பண்டார, குண்டு எறிதல் போட்டியில் சனிக்கிழமை (01)பங்குபற்றவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாவது போட்டியில் இலங்கை 323 ஓட்டங்கள்...

2023-06-04 16:10:20
news-image

ஆசிய கிண்ணப் போட்டிகளை இலங்கை நடத்த...

2023-06-04 11:43:17
news-image

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்தவீராங்கனைகள் -கபில் தேவ்...

2023-06-03 13:50:22
news-image

தோனியின் முழங்கால் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக...

2023-06-03 10:43:52
news-image

ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் பணிந்தது இலங்கை

2023-06-02 20:48:55
news-image

ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 269 ஓட்டங்கள்...

2023-06-02 14:31:46
news-image

 ஜோகோவிச்சின் கொசோவா தொடர்பான கருத்து ஏற்படுத்திய...

2023-06-02 13:22:32
news-image

ஐ.பி.எல்லில் அசத்திய மதீஷ பத்திரணவை சர்வதேச...

2023-06-02 07:25:11
news-image

மதீஷ பத்திரண குறித்து இலங்கை அணித்...

2023-06-02 12:32:24
news-image

23 வயதுக்குட்பட்ட பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில்...

2023-06-01 17:19:41
news-image

47ஆவது தேசிய கூடைப்பந்தாட்டம்: இருபாலாரிலும் வட...

2023-06-01 15:51:26
news-image

"இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பொலிஸாரினால் நடத்தப்பட்ட...

2023-06-01 14:03:45