மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற இரு மகன்கள் உட்பட மூவர் கைது!

Published By: Nanthini

31 Mar, 2023 | 05:33 PM
image

யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில், கரம்பகம் பகுதியில் தந்தையை வெட்டி படுகொலை செய்த குற்றத்தில் இரு மகன்களும், மேலும் ஒருவரும் என மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமது தந்தையை தாமே கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்த  பாடசாலை மாணவர்களான கொலையுண்டவரின் இரு மகன்கள் மற்றும் அவர்கள் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த அவர்களது நண்பர் ஆகிய மூவருமே  கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவர் இன்று (31) காலை கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த இவர், தனது தோட்டத்தில் குடில் ஒன்றினை அமைத்து, அங்கு தங்கி வந்துள்ளார்.

இந்நிலையிலேயே இன்று அவர் தனது தோட்டத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தவரின் இரு மகன்களும் தந்தையை கொன்ற குற்றத்தின் பேரில் கைதாகியுள்ளனர்.

அத்துடன் இந்த கொலைக்கு உதவிய மகன்களின் நண்பர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதனையடுத்து கைதான மூவரும் கொடிகாமம் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

கைதான இரு மகன்களையும் தொடர்ந்து விசாரித்தபோது தெரியவருகையில்,

இரண்டு மகன்களும் 17 மற்றும் 19 வயதுடையவர்கள் ஆவர். இருவரும் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வருகின்றனர்.

தந்தை தம்மிடம் மிக மோசமாக நடந்துகொண்டமையால் அவரை கொலை செய்ததாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகள் அருகில் உள்ள குளத்தினுள் வீசப்பட்டிருந்த நிலையில் விசாரணையின்போது சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கத்திகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மூவரையும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40
news-image

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை சிறைகளிலிருந்து...

2023-06-04 12:01:57
news-image

ரயில் தடம் புரண்டதால் மலையகப் பாதையில்...

2023-06-04 11:39:35