(நா.தனுஜா)
இலங்கைக்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டணியில் (ஆசியான்) அங்கம்வகிக்கும் நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலான சந்திப்பொன்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் தலைமையில் வியாழக்கிழமை (30) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் தெற்கிழக்காசிய நாடுகளின் கூட்டணியில் அங்கம்வகிக்கும் இந்தோனேசியா, மலேசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதிகளும் வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். அத்தோடு அகில இலங்கை புத்தசாசனப்பேரவையின் செயலாளர் முகுனுவெல அனுருத்த தேரரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
இதன்போது 'ஆசியான்' என்று அழைக்கப்படும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டணியில் அங்கம்வகிக்கும் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளையும், பௌத்த சமயத் தொடர்புகளையும் மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் விசேட கவனம்செலுத்தப்பட்டது.
அதேவேளை ஒவ்வொரு நாடுகளுக்கான விஜயத்தின் ஊடாகக் கட்டியெழுப்பப்பட்ட இந்தத் தொடர்பை மேலும் பல்வேறு துறைகளில் விரிவுபடுத்திக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இச்சந்திப்பின்போது வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
அதேபோன்று இலங்கையின் பௌத்த பிக்குகள் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டணியில் அங்கம்வகிக்கும் நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்வதுடன், அதனூடாக பௌத்தமதம்சார் பரஸ்பரத்தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்ளமுடியும் என்று இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவினால் முன்வைக்கப்பட்ட யோசனை ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM