logo

6 சர்வதேச சட்ட ஏற்பாடுகளை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளமை வரவேற்கதக்கது - ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு

Published By: Digital Desk 5

31 Mar, 2023 | 09:19 PM
image

(எம்.மனோசித்ரா)

வலிந்து காணாமலாக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகச் சட்டம் உள்ளிட்ட 6 சட்ட ஏற்பாடுகளை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளமையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வரவேற்றுள்ளது.

எனினும் யுத்தத்தின் போதான மனிதப்படுகொலைகள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உட்பட கடந்தகால மனித உரிமை மீறல்கள் அனைத்திற்குமான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் மீளாய்வு கூட்டத் தொடர் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 24ஆம் திகதி வரை இடம்பெற்றது.

மனித உரிமைகள் குழுவின் மீளாய்வு கூட்டத்தொடர் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக பயங்கரவாதத்தின் வரையறையை சுருக்கி, உடன்படிக்கை , சட்ட உறுதிப்பாடு, முன்கணிப்பு மற்றும் விகிதாச்சாரக் கொள்கைகளுக்கு இணங்கக்கூடிய சட்டத்தை கொண்டு வர இலங்கையை வலியுறுத்துகின்றோம்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு அல்லது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இயற்றுவதற்கான சட்டமியற்றும் செயல்முறையில் மனித உரிமைகள் ஆணைக்குழு , பொது மக்கள் மற்றும் சிவில் சமூகம் உட்பட பலதரப்பட்ட பங்குதாரர்களின் வெளிப்படையானதும் , சுதந்திரமானதும் , அர்த்தமுள்ளதுமான பங்கேற்பை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும்.  

அத்தோடு 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமல் போனோர் தொடர்பான அலுவலகச் சட்டம் , 2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல்கள் (திருத்தங்கள்) சட்டம் , 2017 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உதவுதல் மற்றும் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம்உள்ளிட்டவற்றை இலங்கை ஏற்றுக்கொண்டதை மனித உரிமைகள் குழு வரவேற்கிறது.

இதே போன்று 2018 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க வலிந்து காணாமலாக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனம், 2022ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நில மேம்பாட்டு (திருத்தம்) உள்ளிட்டவற்றையும் இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

எவ்வாறாயினும், இலங்கை அதன் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் மற்றும் இறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றோம். எதிர்காலத் சீர்திருத்தங்கள் மூலம் நீதித்துறை உட்பட மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள நிறுவனங்கள் முழுமையாக மதிக்கப்படுகின்ற அதே வேளை , தன்னிச்சையாக அகற்றப்படுவதற்கு உட்பட்டவை அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களின் முழு சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை சட்டத்திலும் நடைமுறையிலும் இலங்கை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்குப் பொறுப்பான பிற அதிகாரிகள், அவர்களது நியமனங்கள் சர்வதேச தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனிதப்படுகொலைகள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உட்பட கடந்தகால மனித உரிமை மீறல்கள் அனைத்திற்கும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தீவிரப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27