இலங்கைக்கான இந்திய ஜப்பான் தூதுவர்கள் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் கூட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.
பாத்பைன்டர் மன்றம் தொகுத்துள்ள அறிக்கையை வெளியிட்டு வைக்கும்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இந்திய ஜப்பான் தூதுவர்கள் இதனை தெரிவித்;துள்ளனர்.
இந்தியாவும் ஜப்பானும் அமைதியான முற்போக்கான வளமான இந்தோபசுபிக் குறித்து பரந்துபட்ட நலன்களை பகிர்ந்துகொள்கின்றன என இலங்கைக்கான இந்திய தூதுவர் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக்கிற்கான தனது நோக்கத்தை வெளிப்படுத்தினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐஆர்ஓஏ அமைப்பில் இந்தியாமுக்கியமானதொரு நாடு என்பதை வலியுறுத்தியுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் இங்குள்ள மக்களின் செழிப்பிற்காகவும் அனைத்து தரப்பினரினதும் நன்மைக்காகவும் இந்தியா ஜப்பான் இலங்கை இணைந்து செயற்படுவதற்கான பல வாய்ப்புகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது இலங்கையின் முன்னுரிமைகளின் அடிப்படையில் காணப்படவேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையின் மூன்று முக்கியமான தூண்களின் சங்கமத்தில் இலங்கை உள்ளது என இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடங்களில் ஜப்பானும் இந்தியாவும் பிராந்தியத்தில் சாதகமான தாக்கத்தை செலுத்தியுள்ளன என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோசி ஹிடியாகி தெரிவித்துள்ளார்.
இரண்டுநாடுகளும் இலங்கை உட்பட பிராந்தியத்திற்கு எவ்வாறு நன்மைகளை கொண்டுவரமுடியும் என்பதை வெளிப்படுத்துவதற்கு இணைப்பு சிறந்த விடயமாகும் என கருதுவதாக தெரிவித்துள்ள ஜப்பான் தூதுவர் இந்த நோக்கத்திற்காக பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் முன்னோக்கு நுண்ணறிவு மேலும் முக்கியமானது இந்த அறிக்கை அதனை துல்லியமாக குறிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமரின் இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளின் தலைவர்களும் இலங்கையுடனான ஒத்துழைப்பு குறித்து கருத்து பரிமாறிக்கொண்டனர் இலங்கையின் கடன் விவகாரம் உட்பட அனைத்து விடயங்களிலும் நெருக்கமாக இணைந்து செயற்பட இணங்கினார்கள் எனவும் ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.
கடன் விவகாரத்தை பொறுத்தவரை மார்ச் 20 திகதி சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு நிதி உதவி வழங்க இணங்கியது,இலங்கையின் பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்கு இது மிக முக்கியமான நடவடிக்கை எனவும் ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிதி உத்தரவாதம் குறித்த கடிதத்தை ஜப்பான் பாராட்டுகின்றது எனவும் தெரிவித்துள்ள ஜப்பான் தூதுவர் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவும் ஜப்பானும் தொடர்ந்தும் பங்களிப்பு செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM