நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடங்கி வைத்த 'மை டியர் டயானா' இணையத் தொடர்

Published By: Digital Desk 5

31 Mar, 2023 | 04:59 PM
image

பிக் பொஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு 'மை டியர் டயானா' என பெயரிடப்பட்டு, அதன்  படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு அதிதியாக பங்குபற்றி இணையத் தொடரின் படபிடிப்பு கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். 

அறிமுக இயக்குநர்கள் பி. கே. விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல்  இணையத் தொடர் 'மை டியர் டயானா'. இதில்  நடிகர் மணிகண்ட ராஜேஷ், நடிகை மகாலட்சுமி,  ஜனா குமார், மகேஷ் சுப்பிரமணியம், அக்சயா பிரேம்நாத், துரோஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வாட்ஸ் பிரபு ஒளிப்பதிவு செய்யும் இந்த இணையத் தொடருக்கு குஹா கணேஷ் இசையமைக்கிறார். ரொமான்டிக் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த இணையத் தொடரை வோர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் பேரலல் குளோப் ஆகிய  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. 

‘விலங்கு’, ‘அயலி’, ‘செங்களம்’, ‘சுழல்’  என வித்தியாசமான இணையத்தொடர்களுக்கு பாரிய வரவேற்பு கிடைத்து வருவதால், மை டியர் டயானா எனும் இணையத் தொடருக்கும் டிஜிட்டல் தள பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35