இமயமலைப் பகுதியில் உள்ள பெரும்பாலான பனிப்பாறைகள் உருகி வருவதாக நாடாளுமன்றத்தில் இந்தியமத்திய அரசு தெரிவித்துள்ளது.
பனிப்பாறைகள்/ஏரிகள் மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றைக் கண்காணிப்பது தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு இயற்கை பேரழிவுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் இமயமலை ஆற்றின் ஓட்டத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இமயமலைப் பனிப்பாறைகளில் பெரும்பாலானவை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விகிதங்களில் உருகுவதோடு அதன் இடத்தில் இருந்து பின்வாங்கி வருகின்றன என்று அறிக்கை கூறுகிறது. பனிப்பாறைகள் நதி அமைப்பை பாதிக்கும் மற்றும் பனிப்பாறை ஏரிகளின் வெடிப்பு, பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் தூண்டப்படும் வெள்ளம் போன்ற பேரழிவுகளுக்கு வழிவகுக்கும் என்று அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மலைவாழ் மக்கள் மற்றும் மலையடிவார மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்க கூடும். அத்துடன் பனிப்பாறை தொடர்பான தரவுகளுக்கு அண்டை நாடுகளுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் தரவுகளைப் பகிர்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் இமயமலைப் பகுதியில் உள்ள இந்தியாவின் அண்டை நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்தது. உருகும் பனிப்பாறைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அண்டை நாடுகளின் புரிதலுக்கு இது உதவும்.
புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலையின் குளிர் பகல் மற்றும் குளிர் இரவுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அது கூறியது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் முழுவதும் உள்ள 16 இடங்களில் சூடான நாட்களின் சதவீத எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், குளிர் நாட்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM