(இராஜதுரை ஹஷான்)
ஜனநாயகம்,அடிப்படை உரிமை ஆகியவற்றை மலினப்படுத்தும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்ற இடமளிக்க முடியாது அரசாங்கத்திற்கு எதிரான ஜனநாயக போராட்டத்தை சட்டத்தின் ஊடாக முடக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என இலங்கை கம்யூனிசக் கட்சியின் பதில் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கடுமையான தீர்மானங்களை செயற்படுத்த வேண்டும் குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் அரச நிறுவனங்களை முழுமையாக தனியார் மயப்படுத்த முயற்சிக்கிறது.
மக்கள் மத்தியில் அரச நிறுவனங்கள் தெர்ர்பில் வெறுப்பை தோற்றுவித்து, அரச நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் சூழலை ஏற்படுத்தும் ஆரம்பக்கட்ட நடடிவக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வினைதிறனான சேவை கிடைக்க வேண்டுமாயின் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துங்கள் என தற்போது மக்கள் குறிப்பிடுகிறார்கள். முக்கிய அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தினால் அதன் விளைவு பாரதூரமாக அமையும்.நாட்டு மக்களுக்கு நிவாரண விலையில் சேவைகளை வழங்க முடியாத நிலை ஏற்படும்.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள பின்னணியில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாரதூரமானது.
ஜனநாயகம், அடிப்படை உரிமை ஆகியவற்றை மலினப்படுத்தும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்ற இடமளிக்க முடியாதுஅரசாங்கத்திற்கு எதிரான ஜனநாயக போராட்டத்தை சட்டத்தின் ஊடாக முடக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.அரசாங்கத்தின் முயற்சியை நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிப்போம்.
பொருளாதார பாதிப்பினால் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம் பெறும் என்று குறிப்பிட முடியாத அளவுக்கு அரசாங்கம் குளறுபடிகளை தோற்றுவித்துள்ளது. இவ்வாறான பின்னணியில் ஜனநாயக உரிமைகளும்; சட்டத்தால் பறிக்கப்பட்டால் பாரிய விளைவுகள் தோற்றம் பெறும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM