டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் - ஜனாதிபதி

Published By: Digital Desk 3

31 Mar, 2023 | 02:45 PM
image

(எம்.மனோசித்ரா)

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதும், டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வியாழக்கிழமை (30) அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதும், டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்படும்.

நிலையான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்கும் உலக சந்தையில் நாட்டின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான தீர்வுகளைத் தழுவுவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.

தொழில்நுட்ப அமைச்சு முக்கிய பங்குதாரர்களின் ஆதரவுடன் அதற்கான திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தும். பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய ஆராய்ச்சி நிறுவனங்களை ஒருங்கிணைத்து டிஜிட்டல் கொள்கையை திட்டமிடுவதற்கு இந்த வருடம் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க முடியாது. அயல் நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். தென்னிந்தியாவுடன் இணைந்து மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் பிராந்தியமாக இலங்கை இணைந்து செயற்படுவது நன்மை பயக்கும்.

பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க முடியும். உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மையுடனும் நிலையான பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்கும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த இலக்குகளை அடைவதற்கு இலங்கையை உண்மையான டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39