மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும் - ஜனக ரத்நாயக்க

Published By: Vishnu

31 Mar, 2023 | 09:32 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும், ஆகவே மின்கட்டணத்தை திருத்தம் செய்வது தொடர்பான திட்டத்தை முன்வைக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இலங்கை மின்சார சபையிடம் வலியுறுத்தியுள்ளார்.

மின்கட்டண திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைக்கு அமைய மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. மின்பாவனையாளர்களினால் ஏற்றுக்கொள்ள கூடிய நியாயமான முறையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என மின்பாவனைகள் தொடர்பான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் சட்டத்திற்கு முரணான வகையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண அதிகரிப்பு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன். நீதிமன்றம் சிறந்த ஒரு தீர்மானத்தை அறிவிக்கும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் இலங்கை மின்சார சபை செயற்படுவது முறையற்றது.

எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும், ஆகவே மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான திட்டத்தை முன்வைக்குமாறு மின்சார சபையிடம் வலியுறுத்தியுள்ளோம். எரிபொருள் விலை குறைப்பின் பயனை மின்கட்டண திருத்தம் ஊடாக மின்பாவனையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி விலையின் வீழ்ச்சி,டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி உயர்வு ஆகிய காரணிகளை கருத்திற் கொண்டு மின்கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். இலங்கை மின்சார சபை சிறந்த ஒரு தீர்மானத்தை எதிர்பார்க்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40
news-image

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை சிறைகளிலிருந்து...

2023-06-04 12:01:57