அவுஸ்திரேலிய விஜயத்தின் போது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை சிட்னி பாலத்தின் மேல் பாதுகாப்பு அற்ற விதத்தில் அனுமதித்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
பராக் ஒபாமாவும் அவரது மனைவியும் உரிய பாதுகாப்பு ஆடைகள் இன்றி சிட்னி பாலத்தின் மேல் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியிருந்தன.
ஒபாமா குழுவின சிட்னி பாலத்தின் மேல் செல்வதற்கு விடுத்த வேண்டுகோளை நியுசவுத்வேல்சின் போக்குவரத்து பிரிவே ஏற்றுக்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜயம் மேற்கொள்ளும் முக்கிய பிரமுகர்களிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில்கொண்ம பின்னரே இந்த விஜயத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ள போதிலும் பாதுகாப்பு கரிசனைகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றனஎன டெய்லிமெய்ல் செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக மிச்செல் ஒபாமா எவ்வாறு தனது இடுப்பில் காணப்படும் ஜம்பருடன் மேலே சென்றார் என்பது குறித்து விசாரைணகள் இடம்பெறுவதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
படங்களில் மிச்செல் ஒபாமா ஜம்பருடன் காணப்படுவதும் ஒபாமா குழுவை சேர்ந்தவர்கள் கையடக்க தொலைபேசிகளுடன் காணப்படுவதும் பாதுகாப்பு கரிசனைகளை எழுப்பியுள்ளன.
பட்டப்பகலில் ஒபாமா குழுவினர் பாலத்தில் ஏறியுள்ளனர் - கீழே வாகனங்களின் நடமாட்டத்தையும் மக்களின் நடமாட்டத்தையும் காணமுடிகின்றது.
மேலேயிருந்து ஜம்பர் அல்லது கையடக்க தொலைபேசி கீழே கார் மீது வீழ்வதை சிந்திக்க கூட முடியவில்லை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM