ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜராகுவார் என எதிர்பார்ப்பு: சட்டத்தரணி

Published By: Sethu

31 Mar, 2023 | 01:10 PM
image

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் மீது கிரிமினல் வழக்குத் தொடுப்பதற்கு  ஆதரவாக நியூ யோர்க் கிராண்ட் ஜூரிகள் குழுவாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பாலியல் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் எனும் பெண்ணுக்கு டொனால்ட் ட்ரம்ப் 130,000 அமெரிக்க டொலர் பணம் கொடுத்தாகதாக கூறப்படுவது குறித்து ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஸ்டெஃபானி கிளிபர்ட் எனும் உண்மையான பெயர் கொண்ட ஸ்டோர்மி டேனியல்ஸ், தன்னுடன் டொனால்ட் ட்ரம்ப் பாலியல் உறவு கொண்டிருந்ததாக கூறியுள்ளார். 

2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் காலத்தில், மௌனமாக இருப்பதற்காக ட்ரம்ப் பணம் வழங்கினார் ஸ்டோர்மி டேனியல்ஸ் கூறியிருந்தார்.

அப்பெண்ணுக்கு 130,000 டொலர்களை தான் வழங்கியதை ட்ரம்பின் அப்போதைய சட்டத்தரணி மைக்கல் கோஹன் பின்னர் ஒப்புக்கொண்டார். பின்னர் இப்பணத்தை கோஹனுக்கு ட்ரம்ப் திருப்பிக் கொடுத்தார்.

ஆனால், ஸ்டோர்மி டேனியல்ஸுட்ன தான் பாலியல் உறவு கொள்ளவில்லை என ட்ரம்ப் மறுக்கிறார். அத்துடன் சட்டத்துறை கட்டணமாகவே சட்டத்தரணி கோஹனுக்கு தான் பணம் வழங்கியதாக ட்ரம்ப் கூறுகிறார்.

இந்நிலையில், கணக்கு விபரங்கள், மற்றும் தேர்தல் பிரச்சார விதிகளை டொனால்ட் ட்ரம்ப் மீறியுள்ளனார் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நியூயோர்க் நீதிமன்றத்தில் ட்ரம்ப் மீது சுமத்தப்படவுள்ள குற்றச்சாட்டுகளின் விபரத்தை மன்ஹெட்டன் சட்டமா அதிபர் அலுவலகம் பகிரங்மாக வெளியிடவில்லை. 

எனினும், ட்ரம்ப் மீது குறைந்தபட்சம் ஒரு டசின் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடுக்கப்படுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை...

2023-06-04 14:10:37
news-image

மின்னணு இணைப்புக் கோளாறே ரயில் விபத்துக்கு...

2023-06-04 13:15:08
news-image

அமெரிக்காவின் போர் கப்பலை நோக்கி நெருங்கி...

2023-06-04 12:51:50
news-image

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நிகழ்ந்தது எப்படி?-...

2023-06-03 20:36:02
news-image

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக...

2023-06-03 16:21:27
news-image

ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை...

2023-06-03 14:19:16
news-image

இருள் சூழ்ந்த இரவு.. மரண ஓலம்.....

2023-06-03 14:01:21
news-image

கைகால்கள் அற்ற உடல்கள் - தண்டவாளத்தில்...

2023-06-03 10:38:02
news-image

இந்தியாவில் ரயில்கள் மோதி கோர விபத்து...

2023-06-03 06:31:05
news-image

சென்னை நோக்கி புறப்பட்ட கடுகதி ரயில்...

2023-06-02 22:41:15
news-image

சூடான் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை...

2023-06-02 15:20:14
news-image

இலங்கையிலிருந்து கடத்திச் சென்ற தங்கக் கட்டிகளை...

2023-06-02 13:20:31