பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. வெளியான குறுகிய கால அவகாசத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
முத்திரை பதித்த இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. உலக நாயகன் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கு பற்றி முன்னோட்டத்தை வெளியிட்டார்.
இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், தமிழக அமைச்சர் துரைமுருகன், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி உள்ளிட்ட படத்தில் நடித்த நட்சத்திர நடிகர்கள் பங்கு பற்றினர்.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. முதல் பாகத்தினை விட இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. சோழர்கள் மீண்டும் தங்களது தாய் மண்ணிற்கு திரும்புகிறார்கள். பெரிய பழுவேட்டரையரின் சூழ்ச்சி வெற்றி பெற்றதா..? ஆதித்த கரிகாலனை வேருடன் கருவறுக்க சபதம் கொண்டிருக்கும் நந்தினியின் எண்ணம் ஈடேறியதா..? சிங்கள மண்ணில் அருள்மொழிவர்மனை வேருடன் சாய்க்க பாண்டிய மன்னர்களின் சதி நிறைவேறியதா..? போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் முன்னோட்டம் இருப்பதால் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM