எம்மில் பலருக்கும் நரம்பியல் பாதிப்புகளும், ரத்தநாள பாதிப்புகளும் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ரத்த நாளங்களில் ஏற்படும் சிறிய கட்டிகளைக் கூட துல்லியமாகக் கண்டறிவதற்காக தற்போது கார்ல் ஜெய்ஸ் ட்ரினாகுலர் மைக்ரோஸ்கோப்பிக் எனும் முப்பரிமாண நவீன நுண்ணோக்கி கருவி அறிமுகமாகி இருக்கிறது.
ரத்த நாள கட்டி மற்றும் கொழுப்பு கட்டிகள் மிகச் சிறிய அளவில் இரண்டு சென்டிமீற்றர் அளவிற்கு இருந்தாலும்... அதனை துல்லியமாக அவதானிக்க இந்த நவீன கருவி பயனளிக்கிறது.
மேலும் பாதிப்புள்ள கட்டிகளை மட்டும் கண்டறிந்து அருகில் உள்ள ஆரோக்கியமான திசுக்களையோ நரம்புகளையோ எந்தவித பாதிப்பும் இல்லாமல் சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கும் இந்த கருவி பேருதவி செய்கிறது.
மேலும் எமக்கு ஏற்படும் கட்டிகளில் கொழுப்பு கட்டி, நார் கட்டி, நீர்க்கட்டி, திசுக்கட்டி என பலவித கட்டிகள் இருக்கிறது. தோலுக்கும், தசைக்கும் இடையே வளரும் கொழுப்பு கட்டி மிக மெதுவாகவே வளரும்.
மென்மையாகவும், உருண்டையாகவும், நகரக் கூடியதாகவும் இருக்கும். பல தருணங்களில் இந்த கட்டிகளை அழுத்தினால் வலி ஏற்படாது. அதே தருணத்தில் உடலில் எங்கு வேண்டுமானாலும் இத்தகைய கொழுப்பு கட்டிகள் உண்டாகும்.
எனினும் பெரும்பாலானவர்களுக்கு கழுத்து, முதுகு, வயிறு, தொடை, கை, தோள் ஆகிய இடங்களில் இவை ஏற்படுவதற்கு சாத்திய கூறு அதிகம். ஒருவருக்கு ஓரிடத்தில் மட்டும் கட்டி ஏற்படுவது உண்டு. பல இடங்களில் ஏற்படவும் கூடும்.
பாரம்பரிய மரபணு குறைபாடு, அதிக கொழுப்பு, உடல் பருமன், நீரிழிவு, மது அருந்துதல் போன்றவற்றின் காரணமாக இத்தகைய கொழுப்பு கட்டிகள் உருவாகின்றன என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் இவை புற்றுநோய் கட்டியாகவும் மாறக்கூடிய அபாயம் உண்டு.
மேலும் இத்தகைய கருவி மூலம் கண்டறிந்து சத்திர சிகிச்சையை மேற்கொள்வதால், சத்திர சிகிச்சையின் போது ரத்த இழப்பும் குறைவு. மேலும் இதன்போது CUSA எனும் நவீன மருத்துவ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், ரத்த நாள கட்டிக்கான சத்திர சிகிச்சை கூடுதல் வெற்றியை அளிக்கிறது.
டொக்டர் விக்னேஷ்
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM