பிலிப்பைன்ஸில் கப்பல் தீப்பற்றியதால் 31 பேர் பலி

Published By: Sethu

31 Mar, 2023 | 10:15 AM
image

பிலிப்பைன்ஸில் கப்பல் ஒன்று தீப்பற்றியதால் குறைந்தபட்சம் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

'லேடி மேரி ஜோய் 3' எனும் இப்பயணிகள் கப்பல், மிண்டானோவா தீவிலுள்ளஸம்போங்கா நகரிலிருந்து சுலு மாகாணத்திலுள்ள ஜோலோ தீவை நோக்கி நேற்றுமுன்தினம் சென்கொண்டிருந்தது. அப்போது கப்பலில் தீ பரவியதால் பயணிகள் பலர் கடலில் குதித்தனர் என அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கரையோர காவல்படையினர் மற்றும் மீனவர்களால் 195 பயணிகளும் 35 ஊழியர்களுமாக 230 பேர்   காப்பாற்றப்பட்டனர்.

31 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பசிலான் ஆளுர் ஜிம் சலீமன் தெரிவித்துள்ளார். 18 பேரின் சடலங்கள் வாயு சீராக்கப்பட்ட அறை ஒன்றில் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 6 மாத குழந்தை உட்பட 3 சிறார்களும் அடங்கியுள்ளனர்.  இச்சம்பவத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்ள்ளது. 

எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது தெரியவில்லை.

205 பயணிகள் பயணம் செய்யக்கூடிய இக்கப்பலில் அதைவிட அதிக எண்ணிக்கையானோர் பயணம் செய்ததாகவும் ஆளுர் சலீமன் கூறியுள்ளார்.  (AFP Photo)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடவுள்தான் என்னை அனுப்பி வைத்தார் -...

2024-05-23 14:51:12
news-image

பாலஸ்தீன தேசத்தை உடனடியாக அங்கீகரிக்கும் நோக்கம்...

2024-05-23 12:42:55
news-image

பேச்சுவார்த்தைகள் மூலமே பாலஸ்தீன தேசத்தை அடையமுடியும்...

2024-05-23 12:22:25
news-image

பிரிட்டனில் ஜூலை 4-ல் பொதுத்தேர்தல் –...

2024-05-23 11:38:37
news-image

கொல்கத்தாவிற்கு சிகிச்சைக்காக சென்ற பங்களாதேஷ் நாடாளுமன்ற...

2024-05-23 11:27:35
news-image

தரம் குறைந்த ரக நிலக்கரியை மூன்று...

2024-05-22 14:50:08
news-image

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கப்போவதாக நோர்வே அயர்லாந்து...

2024-05-22 14:19:36
news-image

இந்திய மக்களவைத் தேர்தல் : ஐந்தாம்...

2024-05-22 14:09:30
news-image

விமானத்திற்குள் தூக்கி வீசப்பட்டோம் தலைக்கு மேல்...

2024-05-22 12:30:16
news-image

நடுவானில் கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ்...

2024-05-21 16:09:51
news-image

ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற...

2024-05-21 15:06:43
news-image

சீனாவில் ஆரம்பபாடசாலையில் மீண்டும் கத்திக்குத்து சம்பவம்...

2024-05-21 12:30:45