logo

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் 'ரிப்பப்பரி' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Ponmalar

31 Mar, 2023 | 06:13 PM
image

'மாஸ்டர்' படத்தின் மூலம் பிரபலமான மாஸ்டர் மகேந்திரன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ரிப்பப்பரி' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் நா. அருண் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ரிப்பப்பரி'. இதில் மாஸ்டர் மகேந்திரன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காவியா அறிவுமணி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் மாரி, நோபல் ஜேம்ஸ், ஸ்ரீனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு துவாரகா தியாகராஜன் இசையமைத்திருக்கிறார்.

ஃபேண்டஸி திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ கே தி டாக்ஸ் மேன்  எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் நா. அருண் கார்த்திக் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது வெளியீட்டு திகதி  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் திகதியன்று படமாளிகையில் வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யோகி பாபு நடிக்கும் 'தூக்குதுரை' படத்தின்...

2023-06-09 19:49:07
news-image

பகத் பாசிலின் 'தூமம்' படத்தின் முன்னோட்டம்...

2023-06-09 19:48:44
news-image

நடிகர் ஷபீர் நடிக்கும் 'பர்த்மார்க் '...

2023-06-09 19:48:21
news-image

பான் இந்திய படைப்பாக தயாராகும் 'ஆரா'

2023-06-09 19:45:28
news-image

போர் தொழில்- விமர்சனம்

2023-06-09 19:44:58
news-image

நடிகை ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் 'தருணம்'...

2023-06-08 15:56:59
news-image

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'எல் ஜி...

2023-06-08 15:23:39
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'இறைவன்' படத்தின்...

2023-06-08 15:17:13
news-image

'அஸ்வின்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

2023-06-07 21:33:24
news-image

கிஷோர் நடித்திருக்கும் 'முகை' படத்தின் முன்னோட்டம்...

2023-06-07 21:32:40
news-image

பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் பிரத்யேக...

2023-06-07 21:28:34
news-image

பூஜையுடன் தொடங்கிய விக்ரம் பிரபுவின் புதிய...

2023-06-07 21:28:14