logo

'ஆதி புருஷ்' போஸ்டர் வெளியீடு

Published By: Ponmalar

31 Mar, 2023 | 06:13 PM
image

ஸ்ரீ ராமரின் பிறந்த நாளான நேற்று ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படத்தின் தெய்வீகம் ததும்பும் புதிய போஸ்டரை அப்பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

பொலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பிரபாஸ், கிருத்தி சனோன், சையீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் பூஷன் குமார், க்ரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் திகதியன்று உலகம் முழுவதும்  படமாளிகைகளில் வெளியாகிறது. இந்த திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பத்திலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டரில் ஸ்ரீ ராமராக பிரபாஸ், சீதா தேவியாக கிருத்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் தோன்றியிருக்கிறார்கள். தர்மம், தைரியம், தியாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்ரீ ராமரின் நல்லொழுக்கத்தையும் மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதனை இந்த போஸ்டர் நேர்த்தியான முறையில் பிரதிபலித்திருக்கிறது. அதர்மத்தை வீழ்த்தி தர்மம் வெல்வதை அடையாளமாக குறிக்கும் இந்த ராமநவமி தினத்தன்று ‘ஆதி புருஷ்’ படக் குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருப்பது அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யோகி பாபு நடிக்கும் 'தூக்குதுரை' படத்தின்...

2023-06-09 19:49:07
news-image

பகத் பாசிலின் 'தூமம்' படத்தின் முன்னோட்டம்...

2023-06-09 19:48:44
news-image

நடிகர் ஷபீர் நடிக்கும் 'பர்த்மார்க் '...

2023-06-09 19:48:21
news-image

பான் இந்திய படைப்பாக தயாராகும் 'ஆரா'

2023-06-09 19:45:28
news-image

போர் தொழில்- விமர்சனம்

2023-06-09 19:44:58
news-image

நடிகை ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் 'தருணம்'...

2023-06-08 15:56:59
news-image

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'எல் ஜி...

2023-06-08 15:23:39
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'இறைவன்' படத்தின்...

2023-06-08 15:17:13
news-image

'அஸ்வின்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

2023-06-07 21:33:24
news-image

கிஷோர் நடித்திருக்கும் 'முகை' படத்தின் முன்னோட்டம்...

2023-06-07 21:32:40
news-image

பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் பிரத்யேக...

2023-06-07 21:28:34
news-image

பூஜையுடன் தொடங்கிய விக்ரம் பிரபுவின் புதிய...

2023-06-07 21:28:14