வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களங்களின் எல்லையிடப்பட்ட பகுதிகளில் விடுவிக்கபட வேண்டிய காணிகள் தொடர்பான விடயங்கள் குறித்த ஆராய்வு

Published By: Vishnu

30 Mar, 2023 | 09:52 PM
image

கிளிநொச்சி  மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில்.  வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் எல்லையிடப்பட்ட பகுதிகளில் விடுவிக்கபட வேண்டிய காணிகள் தொடர்பான விடயங்கள் குறித்த திணைக்கள அதிகாரிகளுடன் ஆராயப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயல மாநாட்டு மண்டபத்தில் இன்று(30) காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுவின் தலைவருமான திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்டு, மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணி தொடர்பான விடயங்கள் பிரதேச செயலாளர் ரீதியாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், கடந்த மாவட்ட மட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தின் கூட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

மேலும் பிரதேச செயலர் பிரிவு ரீதியாக வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் எல்லையிடப்பட்ட பகுதிகளில் விடுவிக்கபட வேண்டிய காணிகள் தொடர்பான விடயங்கள் குறித்த திணைக்கள அதிகாரிகளுடன்  ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர், கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர், உள்ளூராட்சி திணைக்கள உதவி ஆணையாளர், பூநகரி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07
news-image

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை...

2025-03-14 16:32:13
news-image

மின்சாரக்கட்டணத்தை மூன்று வருடங்களில் 30 சதவீதம்...

2025-03-14 14:48:16