போராட்டக்காரர்களுக்கு புனர்வாழ்வளிக்க தயார் - நீதி இராஜாங்க அமைச்சர்

Published By: Nanthini

30 Mar, 2023 | 11:05 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை  நாடு என்ற ரீதியில் நிறைவேற்ற வேண்டும். பொருளாதார முன்னேற்றத்துக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு தேவையாயின், புனர்வாழ்வளிக்க தயாராக உள்ளோம் என நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:

பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண்போம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் முழுமையான நம்பிக்கை உள்ளது. நாட்டு மக்களும் தற்போது உண்மையை விளங்கிக்கொண்டுள்ளார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை விமர்சிக்கும் எதிர்தரப்பினர் பொருளாதார மீட்சிக்கான மாற்றுத்திட்டங்களை முன்வைக்க வேண்டும்.

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.

எரிபொருள் கட்டமைப்பின் போட்டித்தன்மை வினைத்திறனான முறையில் மேற்கொள்வதற்காகவே எரிபொருள் விநியோக கட்டமைப்புக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

குறுகிய அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்கத்தினர் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு அடிபணியப் போவதில்லை.

நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் போராட்டக்காரர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு பின்வாங்கப் போவதில்லை.

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும். சிறந்த மாற்றத்துக்கான அனைத்து நடவடிக்கைகளையும் சட்டத்தின் ஊடாக முன்னெடுத்துள்ளோம். பொருளாதார முன்னேற்றத்துக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04