கச்சதீவில் நிறுவப்பட்டுள்ள புத்தர்சிலையை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள் - தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

Published By: Digital Desk 3

30 Mar, 2023 | 04:09 PM
image

(நா.தனுஜா)

கச்சதீவில் புத்தர்சிலையொன்று நிறுவப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் இந்திய மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், அந்த புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அப்பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் கச்சதீவில் புத்தர்சிலையொன்று வைக்கப்பட்ட விவகாரம் தமிழ்மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் தோற்றுவித்திருந்தது. கச்சதீவிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயம் இலங்கை மற்றும் இந்தியவாழ் கத்தோலிக்கர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் கச்சதீவில் விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், கச்சதீவில் பாதுகாப்புப்பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ள கடற்படை இணைப்பில் பணிபுரியும் கடற்படையினரில் பெரும்பான்மையானோர் பௌத்தர்கள் என்பதால், அவர்களின் மதவழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஒரு சிறிய புத்தர்சிலை கடற்படையினரின் இல்லத்துக்கு அருகில் வைக்கப்பட்டிருப்பதாகக் கடற்படை விளக்கமளித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் கச்சதீவில் புத்தர்சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மக்களவையில் விவாதிப்பதற்கு மக்களை உறுப்பினர் தொல்.திருமாவளவன் மக்களவையின் செயலாளர் நாயகத்திடம் கடிதம் மூலம் அனுமதிகோரியுள்ளார்.

'சிங்கள இனவாதிகள் மதரீதியான முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் நோக்கில் கச்சதீவில் புத்தர்சிலையொன்றை நிறுவியுள்ளனர். அங்கு புனித அந்தோனியார் தேவாலயம் மாத்திரமே இருப்பதுடன், வருடாந்தத் திருவிழாவும் இடம்பெற்று வருகின்றது. எதுஎவ்வாறெனினும் அங்குள்ள கிறிஸ்தவர்களை விரட்டும் நோக்கில் சிங்கள இனவாதிகள் அப்பகுதியில் பெரியதொரு புத்தர்சிலையை நிறுவியுள்ளனர். இந்நடவடிக்கை தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் வாழும் தமிழர்களுக்கு எதிரானது மாத்திரமல்ல. மாறாக இது அவர்களின் மதரீதியான உரிமைகளுக்கும் எதிரானதாகும்' என்று அக்கடிதத்தில் தொல்.திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இச்செயலைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அப்பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36