தயிர் ரசம்

Published By: Ponmalar

30 Mar, 2023 | 09:49 PM
image

தேவையான பொருட்கள்: 

கெட்டியான தயிர் - ஒரு கப் 

கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி 

கொத்தமல்லி - ஒரு தேக்கரண்டி 

மிளகு - ஒரு தேக்கரண்டி 

சீரகம் - ஒரு தேக்கரண்டி 

தண்ணீர் - ½ கப் 

மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி 

தாளிப்பதற்கு: 

காய்ந்த மிளகாய் - ஒன்று 

கடுகு - ஒரு தேக்கரண்டி 

உளுந்து - ½ தேக்கரண்டி 

பெருங்காயப்பொடி - ½ தேக்கரண்டி 

கறிவேப்பிலை - சிறிதளவு 

கொத்தமல்லித்தழை - சிறிதளவு 

எண்ணெய் - 3 தேக்கரண்டி 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

கடலை பருப்பு, கொத்தமல்லி, மிளகு, சீரகம் ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து பொடித்துக்கொள்ளவும். 

இதனுடன் தயிர், தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும். 

பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும். 

பின்பு இதில் தயிர் கரைசலை ஊற்றி, சூடாக்கி, நுரைக்கும்போது கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்