தயிர் சாண்ட்விச்

Published By: Ponmalar

30 Mar, 2023 | 09:47 PM
image

தேவையான பொருட்கள்: 

கெட்டியான தயிர் - 400 கிராம் 

குடைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - ½ கப் 

கெரட் துருவல் - ½ கப் 

வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1 

பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 1 

கொத்தமல்லித்தழை (பொடிதாக நறுக்கியது) - 1 கைப்பிடி 

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி 

சாட் மசாலா - ½ தேக்கரண்டி 

வெண்ணெய் - சிறிதளவு 

பிரட் துண்டுகள் - 2 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

2 கப் கெட்டியான தயிரை சுத்தமான, மெல்லிய பருத்தித் துணியில் போட்டு சிறு மூட்டையாகக் கட்டித் தொங்க விடவும். 

ஒரு மணி நேரம் கழித்து தயிரில் இருந்த தண்ணீர் முழுவதும் வடிந்து 'கிரீம்' போல் மாறி இருக்கும். அதனை ஒரு பாத்திரத்தில் கொட்டவும். 

அதனுடன் பொடிதாக நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, துருவிய கெரட், மிளகாய்த்தூள், உப்பு, சாட் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும். 

தோசைக் கல்லில் சிறிதளவு வெண்ணெய் தடவி உருகியதும், பிரட் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக ரோஸ்ட் செய்யவும். 

பின்பு அதில் ஒரு பிரட் துண்டின் மீது நீங்கள் தயாரித்து வைத்திருக்கும் தயிர் கலவையை தாராளமாக தடவவும். அதன் மேல் மற்றொரு பிரட் துண்டை மூடி வைத்தால் 'தயிர் சாண்ட்விட்ச்' தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்