ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பொருளாதார வலயத்திலுள்ள காணிகள் ஒருபோதும் விற்பனை செய்யப்பட மாட்டாது. மாறாக குத்தகைக்கே வழங்கப்படுகிறது  என  சட்டஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற  அமைச்சுக்கான புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

தெற்கில் துறைமுகம் ஒன்று அமைக்கப்பட்டதே தவிர அது மூலமான நன்மைகள் பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. 

ஆனால் கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பயன் தரும் வகையிலான செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுத்து வருகின்றது. 

ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தின் மூலம் தொழிற்பேட்டை ஒன்று அமைவது மாத்திரமன்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.