மியன்மாரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு - இராணுவ ஆட்சியாளர்கள் அறிவிப்பு

Published By: Rajeeban

30 Mar, 2023 | 12:30 PM
image

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகளை; கலைக்கும் இராணுவ ஆட்சியாளர்களின் முடிவை அவுஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனநாயக தலைவர் ஆன்சாங்சூகியின்  ஜனநாயகத்திற்கான தேசிய லீக் உட்பட 40 கட்சிகளை கலைத்துள்ளதாக  மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

என்எல்டி உட்பட பல கட்சிகள் கலைக்கப்பட்டுள்ளன என மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.புதிய பதிவு சட்டத்தை இந்த கட்சிகள் ஏற்க மறுத்ததன் காரணமாகவே இந்த கட்சிகள் கலைக்கப்பட்டுள்ளன என இராணுவஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

மியன்மாரின் புதிய கட்சிகள் பதிவு சட்டம் காரணமாக மியன்மாரில் அரசியல் செயற்பாட்டிற்கான தளம் மேலும் குறைக்கப்படுவது குறித்து கரிசனைகொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆட்சியாளர்களின் அதிகரிக்கும் ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகளிற்கு மத்தியில் மியன்மார் மக்கள் தொடர்ந்தும் தங்களின் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர் என  அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

40 கட்சிகளை இல்லாமல் செய்வது குறித்த அறிவிப்பை அமெரிக்கா கடுமையாக கண்டிக்கின்றது என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உரிய பங்குதாரர்கள் இன்றி  நடத்தப்படும் தேர்தல்களை சுதந்திரமானவை நியாயமானவை என கருதமுடியாது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17