கடலடியில் மிகவும் ஆபத்து எனக் கருதப்படும் இராட்சத புலி சுறாவுடன் முகத்திற்கு முகம் பெண் ஒருவர் சந்தித்து கொண்ட சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் உள்ள ஜொபிப்பர் கடல் பிராந்தியத்தில் இம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் வட கரோலினா பகுதியை சேர்ந்த கெசி ஜென்சன் என்பவர் கடலுக்கடியில் பயணித்த போது எதிர் பாராமத விதமாக இராட்சத புலிச் சுறா ஒன்றை கண்டுள்ளார்.

இந்நிலையில் தான் கொண்டு சென்ற மாமிச வகைகள் அடங்கிய பொதியுடன் சுறாவிற்கு அருகில் சென்று எவ்வித தாக்குதலும் இன்றி மீண்டும் உயிருடன் திரும்பியுள்ளார்.

குறித்த சுறா வகையானது உலகில் மிகவும் அச்சுறுத்தலுக்குரிய ஒரு கடலினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பெண் ஒருவர் ஆபத்துமிகு சுறாவின் அருகில் சென்று உயிருடன் மீண்டுள்ளமையை வெளிநாட்டு ஊடகங்கள் விசித்திர சம்பவமாக வெளிப்படுத்தி வருகின்றன.

மேலும் குறித்த சுறா வகை மீன்கள் மானுட தேவைகளுக்காக தோல் எண்ணெய்வகை உற்பத்தி மற்றும் விட்டமீன்கள் தயாரிப்பதற்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.