பாலநாதன் சதீஸ்
வவுனியா நகரசபைக்குட்பட்ட நிர்வாகத்தின் பகுதியில் 17 தொலைத்தொடர்பு கோபுரங்கள் நிறுவப்பட்டிருக்கின்றது.
ஆனால் அவற்றிற்கு அனுமதி பெறப்படவில்லை இருப்பினும் வவுனியா நகரசபை சட்ட நிலைத்தன்மைக்கு அமைவாக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது தொலைத்தொடர்பு கோபுரங்களின் நிர்மாணத்திற்குரிய பணமாக 3000 படி ரூபா 36,000 ரூபாவினை அறவிடுகின்றது.
இதன் மூலம் உள்ளூராட்சியில் காணப்படும் நிர்மாண சட்டம் மீறப்பட்டுள்ளது.
சபையினர் ஒரு தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு எவ்வளவு பணம் கட்டணமாக அறவிடுகின்றார்கள் என்பது தொடர்பான தரவுகள் விளக்கமாக வழங்கப்படவில்லை.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 17 தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கும் தலா 3000 ரூபா பணம் மட்டுமே அறவிடுகின்றார்கள்.
ஆனால் சட்ட பூர்வமாக அங்கிகரிக்கக்கூடிய எந்தவிதமான நடவடிக்கைகளையும் தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவிய நிறுவனமோ அல்லது அந்த ஆளுகை பிரதேசத்தினை நிர்வகிக்கின்ற வவுனியா நகரசபையோ இதுவரை எடுக்கவில்லை.
குறித்த ஆளுகை பிரதேசத்தில் கட்டடங்களை நிர்வகிக்கும் போது அனுமதி பெறப்பட வேண்டும். அனுமதி பெறப்படாது நிர்மானித்தால் அனுமதி பெறப்படும் வரை அதற்குரிய தண்டப்பணத்தினை அறவிட வேண்டும். அனுமதி பெறப்படாது அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு இதுவரை தண்டப்பணத்தினை நகரசபையினர் அறவிடாமல் இருக்கின்றார்கள்.
அந்தவகையில் வவுனியா நகரசபையினரின் எல்லைக்குட்பட்ட இடங்களில் அரச, தனியார் கூட்டு நிறுவனத்தினருக்கு சொந்தமான 40 மீற்றர் உயரமான ஐந்து தொலைத்தொடர்பு கோபுரங்கள் கண்டி வீதியிலும், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வவுனியா பசார் வீதி வவுனியா வைத்தியசாலை, கண்டி வீதி வைரவ புளியங்குளம், கோவில் புதுக்குளம், வேப்பங்குளம் ஆறாம் ஒழுங்கை குருமன்காடு , சின்ன புதுக்குளம் போன்ற இடங்களில் 12 தொலைத்தாெடர்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இவை அமைக்கப்படும்பாேது நகரசபையினரிடம் குறித்த நிறுவனங்கள் அனுமதிபெறாமல் சட்டவிரோதமான முறையிலே அமைத்திருக்கின்றார்கள்.
இது தொடர்பாக கட்டுரையாளனால் தகவலறியும் உரிமை சட்ட்த்தின் மூலம் பின்வருமாறு வினவப்பட்டிருந்தது,
வவுனியா நகரசபையன் கீழ் அமைந்துள்ள தொலைத்தொடர்பு நிலையங்கள் எத்தனை? அவை அமைந்துள்ள இடங்கள் ? அனுமதி எடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு நிலையத்தில் வேறு தொலைத்தொடர்பு நிலையங்கள் அதன்மீது பொருத்தப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் அதன் விபரம்? என வினாக்கள் தொடுக்கப்பட்டிருந்தது.
அதற்கு சபையினர் 17 தொலைத்தாெடர்பு கோபுரங்கள் இருப்பதாகவும், குறித்த தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு அனுமதி பெறப்பட வேண்டும் என கடிதம் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனவும் , தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைப்பதற்கு எம்மிடம் அனுமதி பெறவில்லை எனவும் பதிலளித்திருந்தார்கள்.
இதனை வைத்து பார்க்கும்போது வவுனியா நகரில் அமைக்கப்பட்ட 17 தொலைத்தொடர்பு கோபுரங்களும் சபையினரின் அனுமதி பெறப்படாது சட்டவிரோதமாகவே அமைக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையினரின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்கள் சபையினரிடம் அனுமதி பெறப்படாது அமைக்கப்பட்டுள்ளது என சபையினர் பதிலளித்திருக்கின்றார்கள்.
ஆனால் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மூலம் சபையினருக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கின்றது என வினவிய போது 36,000 ரூபா கிடைப்பதாக கூறியுள்ளனர்.
இதனை வைத்து பார்க்கும் போது வவுனியா நகரில் அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு சபையினர் அதற்கான கட்டணங்களை என்ன முறையில் அறவிடுகின்றார்கள் என்ற கேள்வி உருவாகியுள்ளது.
2018 ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில் நகரசபை எல்லையில் அமைந்துள்ள 4 தொலைத்தொடர்பு நிறுவனங்களினால் பொருத்தப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்களின் அளவு மற்றும் அவற்றின் உயரம் என்பவற்றை கருத்தில் கொண்டு ஒப்பந்தம் பெறுமதிகள் அந்நிறுவனத்தினரிடம் இருந்து இதுவரை அறவிடப்பட்டிருக்க சபையினரால் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
கணக்காய்வு திணைக்களத்தினர் குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டி நான்கு வருடங்களை கடந்த போதும் சபையினர் தாெலைத்தொடர்பு கோபுரங்களிற்கு ஏற்ப பணத்தினை அறவீடு செய்யவில்லை.
இது தொடர்பாக தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் கட்டுரையாளனால் பின்வருமாறு வினவப்பட்டது, தொலைத்தொடர்பு நிலையங்களால் கிடைக்கும் வருமானம் எவ்வளவு? சரியான முறையில் அதன் உயர அளவிற்கேற்ப பெறுமதி கணிக்கப்பட்டு பணம் அறவிடப்படுகின்றதா? ஆம் எனில் எவ்வாறான முறையில் அறவிடப்படுகின்றது? இல்லையாயின் அறவிட எடுத்த நடவடிக்கைகள் என்ன? என வினவப்பட்டதற்கு,
உரிய அளவு பிரமாணங்களுக்கமைய பணம் அறவிடப்படவில்லை எனவும் வர்த்தமானியில் எங்களால் விபரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது எனவும் ஆனால் இதுவரை எங்களிடம் அனுமதி பெறப்படவில்லை ஆகையால் வர்த்தமானி பிரமாணங்களுக்கமைய எங்களால் அறவிட முடியாது எனவும் தொலைத்தாெடர்பு கோபுரங்களுக்கு அனுமதி பெறப்பட வேண்டும் என கடிதம் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனவும் பதிலளித்திருக்கின்றார்கள்.
சபையினர் கூறிய பதிலினை வைத்து பார்க்கும் போது சபையினரின் அசமந்த போக்கினாலேயே சபையினர் தமக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தினை இழந்திருப்பதும், தமக்கான கடமையினை சரிவர செய்ய தவறியிருப்பதும் வெளிப்படையாகின்றது.
தொலைத்தொடர்பு கோபுரங்களை மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அமைப்பது உண்மையில் ஆரோக்கியமானதல்ல, இதில் இருந்து வரும் ஔிக்கற்றைகளால் தலைவலி, மயக்கம் போன்ற பல உபாதைகள் ஏற்படும் அபாயம் இருக்கின்றது.
இவற்றினை பொருட்படுத்தாது வியாபார நோக்கத்திற்காக சபையினரிடம் அனுமதி பெறாது அமைக்கப்பட்ட 17 தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு நடவடிக்கைகள் எடுத்தாக சபையினர் கூறியுள்ளனர்.
இருப்பினும் அது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களும் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும் இரண்டு அறிவித்தல் கடிதங்கள் மட்டும் உரிய தாெலைத்தாெடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் கோவை ஒன்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு வெளிவந்த அறிக்கையில் சுட்டி காட்டப்பட்டிருந்த குறித்த விடயம் அதற்கு பின்னர் வெளிவந்த அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM