புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என தெரிவித்து ஜனநாயக விரோத சட்டம் ஒன்றையே அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது - விஜித்த ஹேரத்

Published By: Vishnu

29 Mar, 2023 | 10:12 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம்  புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என தெரிவித்து ஜனநாயக விரோத சட்டம் ஒன்றையே வர்த்தமானி மூலம் வெளியிட்டிருக்கிறது. இந்த சட்டத்தின் பிரகாரம் தொழிற்சங்க போராட்டம் இடம்பெறுவது தொடர்பில் ஊடகங்களில் அறிவுறுத்தும் ஊடகவியலாளரும் பயங்கரவாதியாகவே கருதப்படும் என மக்கள் விடுதலை முன்னணி ஊடகப்பேச்சாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்கம் வர்த்தமானிப்படுத்தி இருக்கும் புதிய பங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல்களுக்கு விராேதமானது.

ஏனெனில் வேலை நிறுத்தப்போராட்டம் தொடர்பில் இலத்திரனியல் ஊடகங்களில் அல்லது வேறு ஊடகங்கள் ஊடாக அறிவுறுத்துவதும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாத செயலாகும்.

அதன் பிரகாரம் தொழிற்சங்க போராட்டம் ஒன்று தொடர்பாக கையேடு விநியோகித்தல், டுவிட்டர் தகவல் அனுப்புதல் வட்ஸ் அப் தகவல் அனுப்புதல் பயங்கரவாத செயலாகவே அதன் சடடமூலத்தின் 118ஆவது சரத்தில் அதுதொடர்பான விதிகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோன்று ஏதாவதுதொரு  தொழிற்சங்க போராட்டம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அறிக்கையிட்டால் அவரையும் இந்த சட்டத்தின் பிரகாரம் கைதுசெய்ய முடியுமாகிறது. 

அரசாங்கம் பயங்கரவாத வெளியீடுகளாக வரைவிலக்கனப்படுத்தும் வெளியீடுகளின்  உள்ளடக்கங்களை இலத்திரனியல் ரீதியாக அனுப்புவதும் பயங்கரவாதச் செயலாகவும் சட்ட மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் யாராவது தொழிற்சங்க போராட்டம் ஒன்று தொடர்பில் கைத்தால் அவர் பயங்கரவாதியாக பெயரிடப்படும். அதேபோன்று ஏதாவது ஒரு நடவடிக்கையை அனைத்து மக்களும் ஒன்றிணைந்து மேற்கொண்டாலும் பயங்கரவாத முத்திரை குத்தமுடியுமான சரத்துக்களும் அதில் இருக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைகளை செயற்படுத்திக்கொண்டு, மக்களுக்கு வாழமுடியாத மிகவும் கடுமையான நிலைமை நாள்தோரும் ஏற்பட்டு வருவதால், அதற்கு எதிரான மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்கே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற பெயரில் வர்த்தமானி படுத்தி இருப்பது, ஜனநாயக பிராேத சட்டமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17