உரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரையின் பாசத்தினை கண்டு மரணசடங்கில் கலந்துக்கொண்டவர்களும் கண்ணீர் விட்ட சம்பவம் பிரேஸிலில் இடம்பெற்றுள்ளது.

செரினோ என்ற குதிரையும் அவரின் உரிமையாளரான 34 வயதுடைய வாக்னர் டே லிமா பிகுயிரோடோ என்ற நபரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

கடந்த 1 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் பிகுயிரோடோ உயிரிழந்துள்ளார்.

இவரின் இறுதி கிரிகையில் கலந்துக் கொண் ட அவரின் குதிரை பிகுயிரோடோவின் பிரிவினை தாங்காது கண்ணீர் விட்டு அழுதுள்ளது.

இச்சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் குதிரையின் பாசத்தினை கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.