காத்தான்குடியில் இருந்து 1500க்கும் அதிகமானோர் வருடமொன்றில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம் செய்துவருகின்றனர் என டாக்டர் ஏ.எல்.சியாம் தெரிவித்தார்.

காத்தான்குடி இரத்ததானம் செய்வோர் சமூகம் எனும் அமைப்பை ஆரம்பிக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

காத்தான்குடியில் இரத்ததான முகாம்களை ஒழுங்கு செய்பவர்கள் சமூகசேவை அமைப்புகளாகும்.காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் சுமார் 10 க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் நீண்ட காலமாக பல சிரமங்களுக்கு மத்தியில் இரத்ததானத்தை தொடர்ந்து செய்துவருகின்றன.

இந்த அமைப்புக்களை உள்ளடக்கிய் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு பல விடயங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட வேண்டும் என்பது மிக நீண்டகாலமாக உணரப்பட்டவிடயமாகும் என்றார். இதன்போது பின்வரும் விடயங்கள் தீர்மானிக்கப்பட்டன.

காத்தான்குடியில் உள்ள அனைத்து இரத்ததானம் செய்வோர்கள் மற்றும் அதனை ஒழுங்குசெய்யும் அமைப்புகள் உள்ளடக்கியதான காத்தான்குடி இரத்ததானம் செய்வோர் சமூகம் ஒன்றினை ஆரம்பித்தல், காத்தான்குடி தளவைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ள இரத்தவங்கிக்கான முடியுமான ஆதரவினை வழங்குதல், இரத்ததானம் செய்வோர்களின் சுகாதார நலன்கள் தொடர்பாக இலவச ஆலோசனைகளை வழங்குதல், தேசிய இரத்தவங்கி மற்றும் மட்டக்களப்பு இரத்த வங்கிகளுடனான தொடர்புகளை பேணிக்கொள்ளுதல், இரத்தம் வழங்குவோர், இரத்தம் தேவையானோர்களுடையான தொடர்புகளை இலகுவாக்க மற்றும் தேசிய, சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்த இணையத்தளம் ஒன்றினை உருவாக்குதல், இரத்ததானம் தொடர்பான விழப்புணர்வுகளை உள்ளூர், வெளியூர்களில் அதிகரிக்க முயற்சித்தல்,

இரத்ததான முகாம்களின் கால அட்டவணையினை தயாரித்தல், ஏனைய சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் பங்குகொள்ளுதல் போன்ற விடயங்கள் இங்கு தீர்மானிக்கப்பட்டன என்றார்.