(நா.தனுஜா)
சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைத் தொடர்ந்து அரசாங்கமானது இன்றைய தினம் கடன்வழங்குனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நிகழ்நிலை முறைமையின் ஊடாக தமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றிய செயற்திட்ட விளக்கத்தை (ப்ரசென்டேஷன்) அளிக்கவுள்ளது.
நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை கடந்த 20 ஆம் திகதி அனுமதியளித்துள்ளது.
அதனையடுத்து இலங்கையின் கடன்வழங்குனர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இன்றைய தினம் (30) நிகழ்நிலை முறைமையின் ஊடாக செயற்திட்ட விளக்கத்தை அளிக்கவிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை நேரப்படி பி.ப 6 மணிக்கு (நியூயோர்க் - நண்பகல் 12.30 மணி, லண்டன் - பி.ப 1.30 மணி, பெய்ஜிங் - இரவு 8.30 மணி) இடம்பெறவுள்ள இந்நிகழ்நிலை சந்திப்புக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தலைமைதாங்கவுள்ளனர்.
இதன்போது கடந்த 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தினால் அனுமதியளிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டம் மற்றும் அதன் பிரதான இலக்குகள் குறித்தும், கடன்வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதலீட்டாளர்கள் மற்றும் கடன்வழங்குனர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் நிதியமைச்சு, 'சர்வதேச நாணய நிதியச்செயற்திட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதற்கான முழுமையான கடப்பாட்டை இலங்கை கொண்டிருக்கின்றது.
அதன்படி நிதி ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தல், வரிவருமானத்தை அதிகரித்தல், வெளிநாட்டுக்கையிருப்பை மீளக்கட்டியெழுப்பல், செயற்திறனான பொருளாதார நிர்வாகத்தை மேம்படுத்தல் மற்றும் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை வலுப்படுத்தல் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு அவசியமான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் இலங்கை தொடர்ந்தும் அதன் கடன்வழங்குனர்களுடன் மீயுயர் நம்பிக்கையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கும், நாட்டின் கடன்நெருக்கடிநிலைக்குத் தீர்வு காண்பதை முன்னிறுத்தி கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் எதிர்பார்த்துள்ளது' என்று தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM