logo

மக்களின் நலன் கருதி எரிபொருள் விலைகள் குறைப்பு – அரசாங்கம்

Published By: Digital Desk 3

29 Mar, 2023 | 09:25 PM
image

(எம்.மனோசித்ரா)

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, மக்களின் நலன் கருதி எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலை சூத்திரத்திற்கமைய புதன்கிழமை (29) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இவ் அறிவிப்பையடுத்து , பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சமாந்தரமாக தாமும் விலைகளைக் குறைப்பதாக ஐ.ஓ.சி. நிறுவனமும் அறிவித்துள்ளது.

மின்சக்தி அமைச்சில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியுடன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 400 ரூபாவிலிருந்து 340 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.

ஒட்டோ டீசல் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதன் விலை 405 ரூபாவிலிருந்து 325 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது. 95 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 510 ரூபாவிலிருந்து 375 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.

சுப்பர் டீசல் லீற்றரொன்றின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 510 ரூபாவிலிருந்து 465 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது. மண்ணெண்ணெய் லீற்றரொன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 305 ரூபாவிலிருந்து 295 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.

வழமையான செயற்பாடுகளுக்கமைய ஏப்ரல் முதல் வாரத்திலேயே விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் இதனை எதிர்பார்த்துள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் முற்பதிவுகளை செய்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.

எனவே தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்கள் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக ஓரிரு தினங்களுக்கு முன்னதாகவே விலை திருத்தத்தினை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய மே மாதம் முதலாம் வாரத்தில் மீண்டும் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27