சீரடி சாயி இராஜகோபுர வருடாந்த உற்சவம்

Published By: Ponmalar

29 Mar, 2023 | 09:23 PM
image

கொழும்பு புதுச் செட்டித் தெருவிலுள்ள சீரடி சாயி மத்திய நிலையத்தின் சீரடி மந்தீரின் இராஜ கோபுர வருடாந்த உற்சவம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி புதன் கிழமை பங்குனி உத்திரம் பௌர்ணமி தினத்தில் காலை 5 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி திங்கள்கிழமை தொடக்கம் 5ஆம் திகதி புதன்கிழமை வரை தினமும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக யாக பூஜைகளுடன் காலை, மாலை விளக்குபூஜை, பல்லக்கு சேவை, சாயி பஜனையுடன் இடம்பெறவுள்ளது. அன்னதானம் வழங்கப்படும்.

ஏப்ரல் 5ஆம் திகதி பங்குனி உத்திரம் இரவு சித்திரத்தேர் பவனி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right