logo

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் ஊழியர்களை பணியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை - அமைச்சர் காஞ்சன

Published By: Digital Desk 3

29 Mar, 2023 | 09:22 PM
image

(எம்.மனோசித்ரா)

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் வகையில் அத்தியாவசிய சேவை சட்டத்தை மீறி செயற்படும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பணி இடைநிறுத்தம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் என்பவற்றின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்தோடு எரிபொருள் குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் , நாட்டில் போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் தொடர்ந்தும் தடையின்றி எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டு பெற்றோலிய தொழிற்சங்கத்தின் கடந்த திங்கட்கிழமை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக நேற்று செவ்வாய்கிழமை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் அவதானிக்க முடிந்தது.

இந்நிலையிலேயே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் வகையிலும் , மற்ற ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், அத்தியாவசிய சேவை சட்டத்தை மீறும் வகையிலும் செயற்படும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களுக்கு எதிராக வேலை நிறுத்தம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் என்பவற்றின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது மற்றும் தடையின்றி விநியோகம் தொடரும்.

தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் ஊழியர்களை கடமைக்கு வரவிடாமல் பலவந்தமாக தடுத்ததன் காரணமாக முன்னர் தாமதமாகி வந்த எரிபொருள் விநியோகம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் இயல்பாக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை 6 மணிக்கு கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு காவல்துறை மற்றும் ஆயுதப்படையினர் தொடர்ந்து உதவி செய்வார்கள். நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது. சில எரிபொருள் நிலையங்கள் ஏப்ரல் மாத விலை திருத்தத்தை எதிர்பார்த்து முற்பதிவுகளை வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

புதன்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை பெற்றோலியக் கூட்டுத்தாபன விநியோக முனையங்களிலிருந்து 6,600 லிற்றர் லங்கா ஒட்டோ டீசல் மற்றும் 6,600 லிற்றர் 92 ரக பெற்றோல் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27