(எம்.மனோசித்ரா)
நாட்டில் எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. இது குறித்து முற்போக்காக சிந்திக்க வேண்டும்.
இதன் மூலம் எரிபொருள் சந்தையில் போட்டி நிலைமை அதிகரிக்கும் போது , நுகர்வோருக்கு பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை சாதகமான நடவடிக்கையாகும். எனினும் மே மாதம் மீண்டும் விலைத் திருத்தங்களை மேற்கொள்ளும் போது தற்போது குறைக்கப்பட்டுள்ள அதே மட்டத்தில் விலைகளை அதிகரிக்கக் கூடாது. மாறாக சமநிலையானதொரு விலை திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போது நாட்டில் எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனை நாம் முற்போக்காக சிந்திக்க வேண்டும். இந்த நிறுவனங்கள் 1960களில் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டன. எவ்வாறிருப்பினும் அதன் பின்னர் அவற்றுக்கான அனுமதி மறுக்கப்பட்டது.
எனவே இந்நிறுவனங்கள் சிங்கப்பூரில் எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுக்க ஆரம்பித்தன. இதன் பிரதிபலனாக துளியளவும் எரிபொருள் வளமற்ற நாடான சிங்கப்பூர் எரிபொருள் விநியோக கேந்திரமாக வளர்ச்சியடைந்துள்ளது. எனவே இவ்வாறான விடயங்கள் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.
குறித்த நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடும் போது போட்டி அதிகரிக்கும். எனவே எரிபொருள் விலை மற்றும் தட்டுப்பாடு இன்மை போன்று சாதகமான நலன்கள் நுகர்வோருக்கு கிடைக்கப்பெரும்.
இவ்வாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய ஊழல் , மோசடிகளை ஒழிப்பதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM