ஜேர்மனியின் வட கிழக்கு கடற்கரையை தாக்கிய புயல் காரணமாக அங்கு பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அங்கு இடம்பெற்ற மோசமான வெள்ள அனர்த்தம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அந்நாட்டின் வட பிராந்தியத்திலிருந்து போலந்து எல்லைக்கு அண்மையிலுள்ள யூஸ்டொம் தீவு வரையான பால்டிக் கடற்கரைப் பிராந்தியத்திலுள்ள நகர்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

கடல் மட்டமானது சாதாரண மட்டத்திலும் சுமார் 6 அடியால் உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.