பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் பேதுரு கல்லீசி ஸ்பானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மட்ரிட் நகரில் திங்கட்கிழம இரவு இச்சம்பவம் இடம்பெற்றது.
பெரு கால்பந்தாட்ட அணியினர், மொரோக்கோவுடனான சினேகபூர்வ போட்டியொன்றில் பங்குபற்றுவதற்காக திங்கட்கிழமை இரவு மட்றிட் நகரிலுள்ள ஹோட்டலை வந்தடைந்தனர்.
அங்கு சுமார் 300 ரசிகர்கள் அவர்களை வரவேற்க காந்திருந்த நிலையில், ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக ஸ்பொனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீரர்களை நெருங்குவதற்கு ரசிகர்கள் முயற்சித்த நிலையில், நெரிசலைத் தவிர்ப்பதற்காக பொலிஸார் நடுவில் புகுந்து இரு தரப்பினரையும் பிரி;த்தனர்.
அப்போது வீரர் ஒருவர் பொலிஸாரின் கண்ணை தாக்கினார். அதையடுத்து அவ்வீரர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட வீரர் பெரு கோல்காப்பாளரும் அணித்தலைவருமான பேதுரு கல்லீசி என பெரு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பின்னர், அவர் வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படாமல் விடுவிக்கப்பட்டார்.
செவ்வாய் இரவு, அத்லெட்டிக்கோ மட்றிட் அரங்கில் நடைபெற்ற பெரு- மொரோக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி கோல் எதுவும் புகுப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவுற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM