கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற உலக நீர் தினம் 2023 நிகழ்வு

Published By: Ponmalar

29 Mar, 2023 | 02:37 PM
image

வடக்கு மற்றும் வடமத்திய மாகாண தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையின்  உலக நீர் தினம் 2023 நிகழ்வுகள் நேற்றைய தினம் கிளிநொச்சியில் அமைந்துள்ள  நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்  அலுவலகத்தில் இடம்பெற்றது.

உலக நீர் தினத்தை முன்னிட்டு மேற்படி இரு மாகாணங்களில் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட சுவரொட்டி போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் என்வற்றில் தெரிவு  செய்யப்பட்ட  மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, நீண்ட காலம் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு இரு மாகாணங்களிலும் சிறந்த அலுவலகங்களும் தெரிவு செய்யப்பட்டு  மதிப்பளிக்கப்பட்டன.

மேலும் முல்லைத்தீவு மகா வித்தியாலயம் மற்றும் முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலயம் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர் எந்திரி சுதாகரன், கிளிநொச்சி மாவட்ட  மேலதிக அரச அதிபர் திருலிங்கநாதன், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்  மேலதிக பொது முகாமையாளர் வடக்கு, வடமத்திய மாகாணம் எந்திரி பாரதிதாசன், வட  மாகாண  பிரதி பொது முகாமையாளர் எந்திரி பிரதீபன் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் பொறியியலாளர்கள் உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right