logo

சமூகங்களை துருவமயப்படுத்தும் ஊடகங்கள் - அவுஸ்திரேலியாவில் பராக் ஒபாமா சீற்றம்

Published By: Rajeeban

29 Mar, 2023 | 01:15 PM
image

ரூபேர்ட் மேர்டோக்கின் ஊடக சாம்ராஜ்யம் மேற்கத்தைய சமூகங்களை அதிகளவு துருவமயப்படுத்தியுள்ளது என சிட்னியில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த ஊடகங்கள் மக்கள் மத்தியில் கோபம் மற்றும் வெறுப்பை தூண்டும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை இரவு சுமார் 9000 மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் அவுஸ்திரேலியா குறித்த தனது சிறுவயது ஞாபகங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் சீனா குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் துருவமயப்படுத்தலிற்கான ஒரு காரணம் உள்ளது இது அமெரிக்காவிற்கு மாத்திரம் உரியது இல்லை என தெரிவித்துள்ள பராக்ஒமாஊடகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றமும் அவை சொல்லும் செய்திகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுமே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

ருபேர்ட் என்ற பெயருடன் ஒருநபர் இருக்கின்றார் நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள் அவரே இதற்கு காரணம் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி பேசும்வானொலி சமூக ஊடகங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டதன் பரந்துபட்ட போக்கை அவர் சிறந்த முறையில் பயன்படுத்தினார்எனவும் அவர் தெரிவித்துள்ளார்

தங்கள் கொள்கை சார்ந்த ஊடகங்களை பயன்படுத்தும் பழக்கம் மக்கள் மத்தியில் உள்ளது குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது  என்ற நிலை காணப்படுகின்றது  அமெரிக்காவில் பொக்ஸ் நியுஸ் அவுஸ்திரேலியாவில் ஸ்கை நியுஸ் நீங்கள் பார்ப்பது எதுவாகயிருந்தாலும் நீங்கள் பார்ப்பது எல்லாம் ஒரு செய்தி மூலத்தை தான் என பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கூட்டு உரையாடலும் பகிரப்பட்ட கதையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஊடகங்களின் பொருளாதாரம் - கிளிக்குகள் நாங்கள் எப்படி மக்களை கவர்ந்திருக்கலாம் என்பதிலேயே தங்கியுள்ளது எனவும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நிறைய கற்பனையோ சிந்தனையோ சுவாரஸ்யமான விடயங்களோ இல்லாமல் மக்களை கவருவதற்கான ஒரே வழி அவர்களை கோபக்காரர்கள் ஆக்குவது வெறுப்பு மிக்கவர்களாக்குவது எனவும்  அவுஸ்திரேலியாவில் கருத்து தெரிவித்துள்ள பராக் ஒபாமா மக்களை யாரோ கோபப்பட வைப்பது போலவும் அவர்களிற்குரியவற்றை யாரோ பறித்துக்கொள்ளமுயல்வது போலவும் உணர்வை ஏற்படுத்துவதே  ஊடகங்கள் மக்களை கவருவதற்கான இலகுவான வழி எனவும் தெரிவித்துள்ளார்.

நீங்கள் பழைய பாணியிலான இனவெறியையும் ,பாலின வெறி ஓரினச்சேர்க்கை போன்ற விடயங்களையும்  வழங்கினால் ஊடகங்களால் மக்களை கவர முடியும் என பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

நாங்கள் தற்போது அடையாள அரசியலின் காலத்தில் இருக்கின்றோம் அடையாள அரசியல் குறித்து விட்டுக்கொடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

எதிர்கால  செயற்கை நுண்ணறிவும் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நபர்கள் போல பேச முடிவதும் எதிர்காலத்தில் நிலைமையை மேலும் சவாலானதாக்கும் என குறிப்பிட்டுள்ள பராக் ஒபாமா  தன்னை போல குரல்பதிவொன்று வெளியானால்  தனது மனைவியினால்  மாத்திரம் உண்மையை கண்டுபிடிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல்துன்புறுத்தல் குற்றம்சாட்டிய மல்யுத்த வீராங்கனையை குற்றச்சாட்டுக்குள்ளான...

2023-06-10 14:25:19
news-image

துப்பாக்கி, வாள் வைத்திருக்காத இந்துக்களுக்கு உதை...

2023-06-10 11:57:00
news-image

பிரித்தானிய முன்னாள் பிரதமர் ஜோன்சன், எம்.பி...

2023-06-10 11:18:34
news-image

டிரம்ப் பதவி விலகிச் செல்லும்போது அணுவாயுத...

2023-06-10 10:14:58
news-image

காண்டாஸ் விமான  ஊழியர்களின் சீருடை விதிகளில்...

2023-06-09 16:43:20
news-image

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள்...

2023-06-09 15:29:54
news-image

ரஷ்ய குடியிருப்புக் கட்டடத்தின் மீது ஆளில்லா...

2023-06-09 13:53:29
news-image

புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான சட்டத்தை...

2023-06-09 12:46:05
news-image

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து: 20...

2023-06-09 12:11:52
news-image

விமானத்தின் கதவு இருந்த இடத்தில் மேகம்...

2023-06-09 11:35:50
news-image

ஆப்கான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 11 பேர்...

2023-06-09 11:03:04
news-image

வீடியோ கேம்ஸ் மூலம் வளரிளம் பருவத்தினர்...

2023-06-09 10:43:28