பரதநாட்டிய அரங்கேற்றம்

Published By: Ponmalar

29 Mar, 2023 | 03:10 PM
image

நாட்டிய கலாமந்திர் அதிபர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவியும் திரு.திருமதி அல்லி, தில்லை நடராஜா தம்பதிகளின் புதல்வியுமான செல்வி அபிராமி தில்லை நடராஜாவின் அரங்கேற்றம் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறும்.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மொரட்டுவை பல்கலைக்கழக பொறியியல்பீட கணினியியல் பொறியியல்துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி உதயசங்கர் தயாசிவம் கலந்து கொள்வதோடு திலகநர்த்தனாலயம் இயக்குநர் கலாபூஷணம் யசோதரா விவேகானந்தன்  கௌரவ விருந்தினராகவும், கொழும்பு வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் திருமதி அருந்ததி ராஜவிஜயன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

திருமதி கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனின் நடன நெறியாள்கையில் நடைபெறும் அரங்கேற்ற நிகழ்வில் குயிலுவக் கலைஞர்களாக அருணந்தி ஆரூரன் (பாட்டு), ச. நாகராஜன் (மிருதங்கம்), நித்தியானந்தன் (வீணை), பிரியந்த (புல்லாங்குழல்), ரட்ணம் ரட்ணதுறை (தாளதரங்கம்) ஆகியோர் இசை வழங்கவுள்ளனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right