‘மர மனிதன்’ என்று அழைக்கப்படும், விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷ் வாசி ஒருவர் விரைவில் வீடு திரும்பவுள்ளார்.
அப்துல் பஜந்தர் (27) என்பவர் பங்களாதேஷைச் சேர்ந்தவர். இவர் மிக மிக அரிதான ‘எப்பிடர்மோடிஸ்ப்ளேசியா வெருஉஃபோர்மிஸ்’ (Epidermodysplasia Verruciformis) என்ற மரபணுக் கோளாறால் உண்டாகும் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் இவரது கைகளிலும் கால்களிலும் மரப்பட்டையைப் போன்ற தோற்றமுடைய மருக்கள் மளமளவென்று வளரத் தொடங்கின.
பார்ப்பதற்கு மரத்தின் வேர்களைப் பற்றியிருப்பது போன்ற இந்தத் தோற்றமானது பஜந்தரைத் தனிமைப்படுத்தியது. பஜந்தர் இந்த நோயால்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை கடந்த வருடமே மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதையடுத்து அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. பதினாறு முறை சத்திர சிகிச்சைகள் செய்து இந்த ஐந்து கிலோ எடையுள்ள மருக்கள் அகற்றப்பட்டன. தற்போது ஏறக்குறைய அவர் முழு குணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த வகை நோய்க்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தியது ஒரு மருத்துவ சாதனை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய்க்கு முகங்கொடுக்க முன்னர் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பஜந்தர், ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையும் ஆனார். ஆயினும், நோய் முகங்காட்டத் தொடங்கியதும், மீண்டும் தன் குழந்தையைக் கைகளில் ஏந்திப் பிடித்து விளையாட முடியாது போய்விடுமோ என்று பயந்து போயிருந்தார்.
எனினும் சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து, வீடு போவதற்குத் துடியாய்த் துடிதுடிக்கிறார் இந்த ‘முன்னாள்’ மர மனிதர்!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM