சுபயோக தாசன்
எம்மில் பலரும் சனிப் பெயர்ச்சி என்றால் அதிக ஆர்வம் காட்டுவர். சனி பகவான் கொடுத்தால் யார் தடுப்பார் ? என்பது மட்டுமல்ல சனி பகவான் நீதி, நேர்மை ஆகியவற்றுக்கு சொந்தக்காரர். இந்த ஜென்மத்தில் நாம் பெற்றிருக்கும் கர்மாவை அனுபவிப்பதற்கான சூழலை ஏற்படுத்துபவர் சனி பகவான் தான் என்பதால் சனி பெயர்ச்சியாகிறது என்றால் எம்மில் பலருக்கும் பதற்றம் ஏற்படுகிறது.
இந்த தருணத்தில் சனி பெயர்ச்சியை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சோதிடர்கள் திருக்கணித முறைப்படியே பின்பற்றுகிறார்கள். ஆனால் சனி பகவானுக்கு பிரத்யேக ஆலயமாக கருதப்படும் திருநள்ளாறு தாபாரேண்யஸ்வரர் ஆலயத்தில் வாக்கிய பஞ்சாங்க முறையிலான சனிப்பெயர்ச்சியை தான் பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சனி பெயர்ச்சி டிசம்பர் மாதம் இருபதாம் திகதி அன்று நடைபெறும் என வாக்கிய பஞ்சாங்கத்தை பின்பற்றும் சோதிடர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் மகர ராசியில் அவிட்டம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் சனி பகவான், மார்ச் மாதம் 29 ஆம் திகதியான இன்று, கும்ப ராசியில் இருக்கும் அவிட்ட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதாவது மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாகிறார். அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சியாகும் சனி பகவான், அங்கு குறிப்பிட்ட காலம் வரை இருந்து அதன் பிறகு வக்கிரகதி அடைந்து மீண்டும் அவிட்டம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்திற்கு திரும்புகிறார். அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் 146 நாட்கள்.. அதாவது மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை சஞ்சரிக்கிறார். ஜூன் மாதம் 27 ஆம் திகதி சனி பகவான் வக்ரகதி பெறுகிறார். இங்கு இவர் ஜூன் ஜூலை, ஓகஸ்ட் மாதம் 23ஆம் தேதி வரை பயணித்து...ஓகஸ்ட் 24 ஆம் தேதி அவிட்டங நட்சத்திரம் இரண்டாம் பாதத்திற்குள் திரும்புகிறார். அதாவது கும்பத்திலிருந்து மீண்டும் மகரத்திற்குள் சஞ்சரிக்கிறார்.
அதனால் இது ஒரு சிறிய அளவிலான சனிப் பெயர்ச்சி என குறிப்பிடலாம். சனிபகவான் கர்மக்காரன், ஆயுள் காரன் என்பதால் இவரது சஞ்சாரத்தை மக்கள் கவலையுடன் எதிர்நோக்குகிறார்கள். இருப்பினும் மார்ச் 29 தேதி முதல் டிசம்பர் 20 வரையிலான வரையில் சனியின் சஞ்சாரம் கும்ப ராசி மற்றும் மகர ராசியில் இருப்பதால் இவர் எம்மாதிரியான பலன்களை வழங்குவார் என்பதனை காண்போம்.
சனியின் மூன்றாமிடப்பார்வை, ஏழாமிடப் பார்வையை விட பத்தாமிடப் பார்வை நல்ல பலனை வழங்கும். இருப்பினும் கோச்சார கிரகங்களான குரு ராகு கேது ஆகியவற்றின் சம்சாரங்களை பொருத்தும், கிரக இணைவுகளை பொருத்தும் பலன்களை வழங்குவார்.
சனி பெயர்ச்சியை பற்றி நல்லொழுக்கம் நேர்மையான சம்பாத்தியம் போன்றவற்றில் பற்று கொண்டவர்கள் கவலை கொள்ள தேவையில்லை. இவர்களுக்கு சனி பகவான் நல்ல பலனையே வழங்குவார். அஷ்டம சனி கண்டக சனி அர்த்த அஷ்டம சனி ஏழரை சனி என எந்த சனியாக இருந்தாலும்... நல்ல பலன்கள் கிடைக்க அல்லது சனியின் கடுமையான தோஷத்தில் இருந்து ஆறுதல் பெற... சனியின் அம்சங்களாக கருதப்படும் முதியவர்களை... மாற்றுத்திறனாளிகளை.. தூய்மை பணியாளர்களை.. சமமாக பாவித்து அவர்களின் சிறிய அளவிலான எதிர்பார்ப்புகளை அதாவது ஒருவேளை உணவு உடை காலனி போன்றவற்றை தானமாக வழங்க வேண்டும்.
அத்துடன் சனிஸ்வர பகவான் சாந்தசொருபியாக அருள்பாலிக்கும் தமிழகத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு சிவாலயத்திற்கு சென்று ஈஸ்வரனையும் அம்பாளையும் சனீஸ்வரனையும் ஒரு முறை தரிசிக்க வேண்டும் இதனை செய்தால் அனைத்து ராசையிட இருக்கும் சனி பெயர்ச்சியால் நல்ல பலனே கிடைக்கும். திருநள்ளாறு மற்றும் குச்சனூர் ஆகிய சனிபகவான் அருள் புரியும் ஆலயங்களுக்கும் சென்று, அவரை தரிசித்து அருளைப் பெறலாம். மேலும் மேஷம் தொடங்கி மீனம் ராசி வரையிலான அதிசார சனிப்பெயர்ச்சி பலன்கள் விரைவில் வெளியாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM