(நெவில் அன்தனி)
சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கையின் நடன நடன விளையாட்டை (DanceSport) உயரிய நிலைக்கு இட்டுச் செல்லும் குறிக்கோளுடன் அயராது உழைக்க DanceSport ஸ்ரீலங்கா நிருவாக சபை பிரதிநிதிகள் உறுதிபூண்டுள்ளனர்.
DanceSport (டான்ஸ்ஸ்போர்ட்) ஸ்ரீலங்கா நிறுவனத்தின் (சங்கம்) தலைவர் மாலிங்க பெர்னாண்டோ, உதவித் தலைவர் காமினி ஜயசிங்க, செயலாளர் கோபிநாத் சிவராஜா, நடன விளையாட்டு மேம்பாட்டுத்துறை பணிப்பாளர் கெவின் நுகேரா ஆகியோர் இவ் விளையாட்டை இலங்கை முழுவதும் பிரபல்யம் அடையச் செய்து அதன் மூலம் சர்வதேச அரங்கில் இலங்கையை உயரிய நிலைக்கு இட்டுச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந் நிலையில் DanceSport ஸ்ரீலங்கா நிறுவனத்தின் 2ஆவது வருட நிறைவைக் கொண்டாடும் வகையில் சினமன் கிராண்ட் ஹோட்டலில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற விசேட வைபவத்தின்போது DanceSport இணையத்தளம் (www.dancesportlanka.com) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சினமன் க்ராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற வைபவத்தின்போது பல்வேறு DanceSport நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
ஒலிம்பிக் விளையாட்டுக்களில் ஒன்றாக DanceSport 1997இல் சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும் இலங்கையில் அவ்விளையாட்டு கடந்த ஓரிரு வருடங்களிலேயே சிறிய அளவில் பிரபல்யம் அடையத் தொடங்கியது.
DanceSportஐ இலங்கையில் ஆரம்பிக்குமாறு சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெக் கோரியதற்கு அமைய இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, பொருளாளர் காமினி ஜயசிங்க ஆகியோர் எடுத்த அயரா முயற்சியின் பலனாக DanceSport ஸ்ரீலங்கா நிறுவனம் 2020இல் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
மாலிங்க பெர்னாண்டோ, காமினி ஜயசிங்க, கோபிநாத் சிவராஜா ஆகியோர் DanceSport ஸ்ரீலங்கா நிறுவனத்திற்கான யாப்பு விதிகளை வகுத்து 2021ஆம் ஆண்டு இந்த சங்கத்தை உத்தியோகபூர்வமாக ஸ்தாபித்தனர்.
விளையாட்டுத்துறை அமைச்சில் இந்த சங்கத்தைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய ஒலிம்பிக் குழு செயலாளர்நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வாவும் DanceSport ஸ்ரீலங்கா நிருவாக சபையினரும் கேட்டுக்கொண்டதற்கு அமைய இன்னும் 2 மாதங்களில் விளையாட்டுத்துறை அமைச்சில் இந்த விளையாட்டு பதிவுசெய்யப்படும் என விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரசூரிய உறுதி வழங்கினார்.
விளையாட்டுத்துறை அமைச்சில் இவ் விளையாட்டு பதிவுசெய்யப்பட்டு அமைச்சின் அங்கீகாரம் கிடைத்ததும் இலங்கை நடன விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக அரங்கில் பங்குபற்றக்கூடியதாக இருக்கும் என DanceSport ஸ்ரீலங்கா நிறுவனத்தின் செயலாளர் கோபிநாத் சிவராஜா தெரிவித்தார்.
'பிரான்ஸில் நடைபெறவுள்ள பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை வீர, வீராங்கனைகளை ஒலிம்பிக் DanceSportஇல் பங்குபற்றச் செய்வதே எமது நோக்கம் ஆகும்.
அதற்கு முன்னோடியாக நடைபெறவுள்ள ஆசிய பிராந்தியத்திற்கான தகுதிகாண் சுற்றில் இலங்கை வீர, வீராங்கனைகள் பங்குபற்றுவர். இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ் விளையாட்டு பிரபல்யம் அடைந்துள்ளது.
எனவே வெகுவிரைவில் சர்வதேச அரங்கில் DanceSport விளையாட்டில் இலங்கைக்கு பதக்கங்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்' என்றார் கோபிநாத் சிவராஜா.
எதிர்பார்ப்பு, ஆர்வம், துணிச்சல் ஆகிய மூன்று பிரதான அம்சங்கள் DanceSportக்கு மிகவும் அவசியமாகும்.
அத்துடன் உடல் வலிமை, சுறுசுறுப்பு, கூட்டுமுயற்சி, சகிப்புத்தன்மை, உயர் ஆற்றல், உடல்சாகசம், ஒழுக்கம், குழுப்பணி, காருண்யம், முகபாவனை, இசையுடன் ஒத்துப்போதல் ஆகியன DanceSport இல் முக்கிய அம்சங்களாகும்.
மேலும் சமூக நடனம், போட்டித்தன்மையுடான நடனம், ஜோடி நடனம், லத்தீன் அமெரிக்க நடனம், ப்ரேக்கிங் டான்ஸ் ஆகியவற்றின் கலவையே DanceSport ஆகும்.
இந்த நடன விளையாட்டுக்கு வயதெல்லை இல்லை. இளையோர் முதல் முதியோர் வரை DanceSportஇல் பங்குபற்றலாம்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பாலின சமத்துவத்தைப் பேணுவதுடன் இளையோரை மையப்படுத்திய விளையாட்டுக்களை நடத்த சர்வதேச ஒலிம்பிக் குழு தீர்மானித்துள்ளது. எனவே இளையோர் பெரிதும் விரும்பி பங்குபற்றிவரும் 4 புதிய விளையாட்டுக்கள் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுவிழாவில் அறிமுகமாகவுள்ளன.
DanceSport (டான்ஸ்ஸ்போரட்), SportClimbing (ஸ்போர்ட் க்ளைம்பிங்), SkateBoarding (ஸ்கேட்போர்டிங்), Surfing (சேர்விங்) ஆகிய நான்கு புதிய விளையாடுக்கள் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் அறிமுகமாகின்றன.
உலக டான்ஸ்ஸ்போர்ட் சம்மேளனத்தினால் (World DanceSport) அங்குரார்ப்பண DanceSport போட்டி தாய்ப்பே நாட்டில் 2013இல் அரங்கேற்றப்பட்டது. ஐந்து வருடங்கள் கழித்து புவனர்ஸ்அயர்ஸில் நடைபெற்ற 2018 இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் முதல் தடவையாக DanceSport இடம்பெற்றது.
இலங்கையில் இவ் விளையாட்டு இளையோரைப் பெரிதும் கவரும் என DanceSport ஸ்ரீலங்கா நிறுவனம் நம்புவதாக அதன் செயலாளர் கோபிநாத் சிவராஜா குறிப்பிட்டார்.
(பட உதவி: திபப்பரே.கொம்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM