மட்டக்களப்பில் போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் கைது

Published By: Digital Desk 3

29 Mar, 2023 | 01:05 PM
image

மட்டக்களப்பு நகரில் போலி வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றை நடாத்தி வந்த மூதூரைச் சேர்ந்த ஒருவரை நேற்று (28) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த நபர் சுற்றுலா துறைக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்று அதற்கான காரியாலயம் ஒன்றை நகர் பகுதியிலுள்ள கல்முனைவீதியில் அமைத்துள்ளார். இந்நிலையில்,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக ஒருவரிடம் 4 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாவை வாங்கி சுற்றலா விசாவில் கட்டார் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அங்கு வேலைக்கு என்று சென்றவர் அறை ஒன்றில் தங்கவைத்த நிலையில் வாடகை பணத்தை செலுத்தாததால் அவர் அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில்,  தனக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக  தெரிவித்து சுற்றுலா விசாவில் அனுப்பி வைத்துள்ளமை தெரியவந்ததையடுத்து அங்கிருந்து விமான மூலம் நாட்டுக்கு திரும்பிவந்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, பொலிஸார் விசாரணையில் சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை  மூதூரைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரைக் கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து வேறு ஒரு நபரின் கடவுச் சீட்டையும் கைப்பற்றினர்.

இதில் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10