logo

ஆர்யாவின் 'காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்' பட டீசர் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Vishnu

29 Mar, 2023 | 01:17 PM
image

தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்யா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்' படத்தின் டீசர் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தென் தமிழகத்தின் மண் சார்ந்த படைப்புகளை தொடர்ந்து இயக்கி, தமிழ் திரையுலகின் மண் மணம் கமழும் இயக்குநராக வலம் வரும் எம். முத்தையா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்'. 

இதில் ஆர்யா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'வெந்து தணிந்தது காடு' பட புகழ் நடிகை சித்தி இத்னானி நடித்திருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் எதிர்வரும் 31-ம் திகதி என்று மாலை ஆறு மணியளவில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் எம் முத்தையாவும்- நடிகர் ஆர்யாவும் முதல் முறையாக இணைந்திருப்பதால் 'காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்' திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right