செவணப்பிட்டியில் வாகன விபத்து : 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு : சாரதி கைது

Published By: Vishnu

29 Mar, 2023 | 01:13 PM
image

மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதியின் செவணப்பிட்டி பகுதியில் இன்று புதன்கிழமை (29) அதிகாலை 2 மணிக்கு நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் சாரதி படுகாயடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கனரகவாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் வெலிகந்தை பொலிசார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேனும் பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற கனரக வாகனமும் இன்று அதிகாலை 2 மணிக்கு செவணப்பிட்டி சிரிகம பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

தம்பட்டை பிரதானவீதி திருக்கோவிலைச் சேர்ந்தவரும் அக்கரைப்பற்று சுவாட் நிறுவனத்தின் நிருவாக தலைவருமான 46 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வடிவேல் பரமசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீமெந்துக்கான செஸ் வரியை குறைக்க அரசாங்க...

2025-01-15 15:31:40
news-image

"அரசியல் கைதிகள் இல்லை" என்ற பழைய...

2025-01-15 15:13:18
news-image

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-01-15 15:08:00
news-image

சீன ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

2025-01-15 15:04:13
news-image

இந்தியாவின் 76 வது குடியரசு தினத்திற்கு...

2025-01-15 14:53:41
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர்...

2025-01-15 14:33:19
news-image

சிகிரியா இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக...

2025-01-15 14:25:36
news-image

தொடங்கொடை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் வெளியான...

2025-01-15 14:23:57
news-image

மட்டக்களப்பில் தொடர் மழையால் வயல் நிலங்கள்...

2025-01-15 13:41:27
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2025-01-15 12:52:44
news-image

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'வெலேசுதா' உட்பட...

2025-01-15 12:57:59
news-image

இலங்கையின் முன்னணி வயலின் இசைக் கலைஞர்...

2025-01-15 13:52:05