அடிபணியாமல் - அஞ்சாமல் ..........

Published By: Rajeeban

29 Mar, 2023 | 09:57 PM
image

உயிர் மெல்ல மெல்ல மறைகின்றது -அந்த நிமிடங்கள் நித்தியமானவை போல காணப்படுகின்றன.

குருதி வெளியேறிக்கொண்டிருக்கின்ற நிலையில் அவர் காணப்படுகின்றார் வலியால் முனங்குகின்றார் துன்பப்படுகின்றார் உலகம் மங்கலாகிவருகின்றது.

விழும் ஒவ்வொரு கருஞ்சிவப்புதுளியும் ஒரு நல்ல மனிதனின் கதையை சொல்கின்றது.நீதிமற்றும் சமத்துவத்திற்கான தனது அறப்போராட்டத்தை கைவிடாத ஒரு தொலைநோக்கு பார்வையுள்ள மனித னின்  கதையை சொல்கின்றது.அவரே சொன்னபடி தான் சொன்ன விதத்தில் செயற்பட்ட எவருக்கும் அடிபணியாத மனிதனின் கதையை சொல்கின்றது.

ரைனே விக்கிரமதுங்க தனது நேசத்திற்குரிய கணவரும் பத்திரிகையாளரும்சண்டேலீடரின் பிரதம ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி நிமிடங்களை இவ்வாறுதான் வர்ணித்தார்.

அடிபணியாத எவருக்கும் அஞ்சாத என்ற லசந்தவின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டவேளை அவர் இதனை தெரிவித்தார்.

அதிகார வேட்கை பிடித்த ஆட்சியாளர்களால் அந்த துணிச்சலான பத்திரிகையாளன் மௌனமாக்கப்பட்டு 14 வருடங்களாகிவிட்டன.

லசந்தவிக்கிரமதுங்க  என்ற அந்த பெயர் இலங்கையின் பத்திரிகை வரலாற்றில் அழிக்க முடியாத தோற்றத்தை பெற்றுள்ளது.

ஊடகம் என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக காணப்படுகின்ற போதிலும் இந்த தூண் ஆட்சியில் உள்ளவர்களால் பல தடவை அழிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரும் சண்டேலீடரின் பிரதான ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்கவின் வாழ்க்கை வரலாற்றை அவரது மனைவி ரைனே விக்கிரமதுங்க எழுதியுள்ளார்..

இந்த நூல் உண்மைக்காக வாழ்ந்த சுவாசித்த இறுதியில்உயிர் துறந்த மனிதனின் வாழ்க்கையை தெரிவிக்கின்றது.

என்னை பொறுத்தவரை இந்த நூல் ஒரு சிகிச்சை ஆனால்இந்த புத்தகத்தை எழுவது லசந்தவின் குறிப்பிடத்தக்க கதையை உலகிற்கு பரிசளிப்பதாகும் என ரெய்னே விக்கிரமதுங்க நூல் வெளியீட்டில் தெரிவித்தார்.

இந்த நூல் பலருக்கு உத்வேகம் அளிக்கும் என நான் நினைக்கின்றேன் குறிப்பாக வளர்ந்துவரும் மற்றும் எதிர்கால பத்திரிகையாளர்களிற்கு என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

லசந்தவின் பாரம்பரியத்தை முன்கொண்டு செல்லும் அனைத்து பத்திரிகையாளர்களிற்கும் நான் நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன் நாங்கள் துயரத்துடன் அறிந்துகொண்டது போல இலங்கையில் ஊடகவியலாளரின்  வாழ்க்கை இலகுவானதாக சுலபமானதாக ஆபத்தற்றதாக இல்லை.

லசந்த போன்ற பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் த நேசனின் கீத் நொயர் என்ற பத்திரிகையாளர் கடத்தப்பட்டு ஈவிரக்கமற்ற விதத்தில் சித்திரவதை செய்யப்பட்டார்,பிரகீத் எக்னலிகொட 2010 இல் காணாமல்போகச்செய்யப்பட்டார்,சந்தியாவும் அவரது இரு பிள்ளைகளும் இன்றும் பதில்களிற்காக காத்திருக்கின்றனர்.

கடந்த 30 வருடங்களில் பத்திரிகையாளர்கள் மாத்திரமின்றி ஊடக நிறுவனங்களும் தாக்குதலிற்குள்ளாகியுள்ளன,

சண்டேலீடரின் அச்சகம் தீமூட்டப்பட்டவேளை  நாங்களும் இந்த அனுபவத்தை எதிர்கொண்டோம்,எங்களின் வீடும் தாக்குதலிற்குள்ளானது.

ஆகவே இலங்கையில் பத்திரிகையாளர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை அனுபவிக்கின்றனர்.

பத்திரிகை ஆசிரியர்களிற்கு எதிராக குற்றவியல் அவதூறு சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பத்திரிகையாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இரண்டு வருடங்களிற்கு மேல் தடுத்துவைக்கப்பட்டனர்.

பத்திரிகை துறை என்பது ஆபத்துடன் போராடுகின்ற விடயம் ஆனால் அது ஒரு மிகுந்த போதை.

உங்கள் நாளத்தில் ஒரு நீல மை உட்புகுந்துவிட்டது என்றால் அதன் பின்னர் நீங்கள் அதிலிருந்து விடுபடமாட்டீர்கள்.

நூல் வெளியீட்டு விழாவில் பிரதான உரையை ஆற்றிய நடிகரும் செயற்பாட்டாளருமான பீட்டர் டி அல்மெய்டா தனது பள்ளிக்கால நண்பனை நினைவுகூர்ந்தார்.ஒரு பத்திரிகையானாக தனது நண்பனின் துணிச்சலை அவர் வியந்தார்.

துணிச்சல் என்பது அச்சமற்றநிலையில்லை,

துணிச்சல் என்பது பயத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அதனை கையாள பழகுவது.

லசந்தவும் எங்களை போல அச்சமடைந்திருக்கவேண்டும்,நாங்கள் செய்யும் பணியை செய்யும் போது ஒரு வித அச்சம் உருவாகும் ஆனால் அவ்வேளையில்தான்  துணிச்சலும் பிறக்கும்.

அச்சம் என்பது எதிர்வினை துணிச்சல் என்பது தீர்மானம்.

லசந்தவிக்கிரமதுங்க     லீடர் மூன்று விடயங்களிற்காக குரல் கொடுக்கின்றது என லசந்த தெரிவித்தார்.இலங்கையை வெளிப்படையான மதச்சார்பற்ற லிபரல் சமூகமாக பார்ப்பதே அது.

அவர் எங்களை இந்த மூன்று சொற்களையும் பற்றி சிந்திக்குமாறு வற்புறுத்துகின்றார் வலியுறுத்துகின்றார் அரசாங்கம் வெளிப்படையாக பொறுப்புக்கூறலில்; ஈடுபடவேண்டும் என அவர் தெரிவித்தார்,நாங்கள் ஐக்கியப்படுவதற்கான தளத்தை மதச்சார்பின்மை தான் வழங்குகின்றது என அவர் தெரிவித்தார்,மூன்றாவதாக அவர் லிபரல் குறித்து கருத்து தெரிவிக்கின்றார் - இது அனைத்து மனித உயிர்களும் வித்தியாசமானவர்களாக உருவாக்கப்பட்டார்கள் ஏனையவர்கள் எப்படி இருக்கின்றார்களே அவர்களை நாங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும்,நாங்கள் எப்படி இருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றோமோ அப்படி அவர்கள் இருக்கவேண்டும் என எதிர்பார்க்க கூடாது.

லசந்த அனைத்து விடயங்களையும் சிறந்த முறையில் ஆவணப்படுத்தினார் அவரிடம் விடயங்கள் குறித்து அறிந்து கொள்வது குறித்த ஒரு ஆழமான ஆர்வம் காணப்பட்டது.அதுவே அவரை முன்னோக்கி நகர்த்தியது அவர் அடிப்படை விடயங்களிற்கு சென்றார் ,பிரச்சினையின் அடிப்படைகளிற்கு சென்றார்,இதுவே அச்சத்தை ஏற்படுத்தும்.

லசந்த வெளிப்படுத்திய துணிச்சல் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களிற்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதுதான் தைரியம் அச்சம் என்ற இரு வார்த்தைகளிற்கு இடையே உள்ள வேறுபாடு என லசந்தவின் நண்பர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றி ரைசா விக்கிரமதுங்க கடந்தவருடம் அரகலயவின் போது மக்கள் எவ்வாறு லசந்தவை நினைவுகூர்ந்து பதாகைகளுடன் காணப்பட்டனர் என்பதை சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடம் மக்கள் தாங்கள் நம்பும் விடயத்திற்காக நாடாளாவிய ரீதியில் குரல்கொடுப்பதை நாங்கள்  பார்த்தோம்,ஊழல் குடும்ப ஆட்சி அரச ஆதரவுடனான வன்முறைகள் ஆகியவற்றிற்கு எதிராக அவர்கள் குரல்கொடுத்தனர்.

ஆர்ப்பாட்டங்களின் போது பதாகைகளுடன் பல இளையவர்கள் லசந்தவை நினைவுகூர்ந்ததை பார்த்தது நம்ப முடியாத விடயமாக காணப்பட்டது என அவர் தெரிவித்தார்.

அவர் இன்று இங்கிருந்திருந்தால் திரைமறைவில் நடக்கும்அரசியல்; சூழ்ச்சிகளை  அம்பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பார்.கதைகைள பெறுவதற்காக அவர் தனக்கேஉரிய வசீகரத்தையும் அரசியலின் இருபுறத்தேயும் உள்ள சூழமைவையும் நம்பியிருப்பார் என அவர் குறிப்பிட்டார்.

அவர் கொல்லப்பட்ட பின்னரே நான் முழுநேர பத்திரிகையாளராக மாறினேன்  அதன் பின்னர் நாங்கள் செய்யும் தொழிலின் தன்மை பெருமளவிற்கு மாறியுள்ளது.

செய்தியறைகள் புலனாய்வு செய்திகள் என்ற விடயத்திலிருந்து வெகுதொலைவிற்கு விலகிச்சென்றுவிட்டன பத்திரிகை சுதந்திரம் எவ்வளவுதூரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாங்கள் பார்க்கின்றோம்  என அவர் குறிப்பிட்டார்.

kamanthi wickramasinga

தமிழில் ரஜீபன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48