சுதுமலை தெற்கு வேம்படி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

Published By: Ponmalar

29 Mar, 2023 | 12:04 PM
image

சுதுமலை தெற்கு வேம்படி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் கடந்த 24ஆம் திகதி இடம்பெற்றது. இவ்வாலயத்திற்கான அடிக்கலினையும் பாரளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனுமே நாட்டிவைத்திருந்தனர்.

குறித்த ஆலயத்தின் முதலாவது கட்டுமானத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் தந்தையாரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம் அவர்களே அடிக்கல் நாட்டி நிதிஉதவியளித்து ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right